தொப்பையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல, ஆனால் வீட்டில் கிடைக்கும் சீரக மசாலாவை பயன்படுத்தினால், இந்த பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம்.
சீரக நீர் உடல் எடையை குறைக்க ஒரு பாதுகாப்பான மற்றும் சிறப்பான பலன் கொடுக்கும் முறையாகும். மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள் மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றம் போன்றவை சிறப்பாக இருந்தால் தான் உடல் எடை குறையும். இவை இரண்டும் சிறப்பாக இல்லை என்றால் உடல் எடை குறையாது. இதனை பெற காலையில் முதலில் சீரக பானத்தை உட்கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்கும் சூப்பர் பானம்
சீரக நீர் ஒரு பிரபலமான எடை இழப்பு அல்லது நச்சு நீக்கும் பானம். சீரகம் எடை இழப்பை விரைவுபடுத்தும். தற்போது உடல் எடை அதிகரித்து வருவதால் வயது மற்றும் பாலினம் வித்தியாசம் ஏதும் இல்லாமல் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். இன்றைய வாழ்க்கை முறை, உணவு பழக்கம், ஆகியவை இதற்கு முக்கிய காரணம். தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பை கரைப்பது மிகவும் கடினம் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறு, அதற்கு நிச்சயம் தீர்வு உண்டு. சீரக நீர் என்னும் இந்த ஸ்பெஷல் பானத்தை குடிப்பதன் மூலம், நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்கலாம். சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு குணங்கள் காரணமாக, சீரக விதைகள் எடை குறைக்க உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
சீரகத்தில் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு திறன்கள் சீரக விதைகளில் ஏராளமாக உள்ளன. அவை செரிமானத்திற்குப் பிறகு பாக்டீரியா எதிர்ப்பு விளைவைக் கொண்ட மெகாலோமைசின் என்ற பொருளை வெளியேற்றுகின்றன. மேலும், சீரகத்தை உட்கொள்வதால் சீரம் புரதம், இம்யூனோகுளோபின்கள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
நச்சுக்களை நீக்கும் சீரக நீர்
இரத்தத்தை சுத்தம் செய்வதன் மூலம் சிறந்த செரிமானம் மற்றும் அழகான சருமம் கிடைக்கும். சீரக நீர், நச்சு நீக்கம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. சருமப் பொலிவு மற்றும் எடை குறைப்பு ஆகியவற்றில் பெரிதும் உதவுகிறது.
சிறந்த செரிமானம்
வயிறு சுரப்பிகளை வெளியிடுவதை ஊக்குவிக்கும் தைமால் என்ற வேதிப்பொருள் இதில் உள்ளதால், சீரக நீர் ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு முக்கியமானது. இது சிக்கலான ஊட்டச்சத்துக்களின் திறம்பட செரிமானத்திற்கு உதவுகிறது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளைத் தவிர்க்கிறது. செரிமானத்திற்கு உதவும் செரிமான நொதிகள் சீரக விதைகளால் தூண்டப்படுகின்றன. இது வீக்கத்தைக் குறைத்து எடை இழப்பை ஊக்குவிக்கிறது.
கொழுப்பை கரைக்கும் சீராக நீர்
சீரகம் இல்லாமல் பல இந்திய சமையல் வகையில் ருசியோ, மணமோ வருவதில்லை. இதை சாப்பிடுவது எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் அனைத்து வயிற்று கோளாறுகளிலிருந்தும் விடுபடலாம். சீரக பானத்தை குடிப்பது நன்மை பயக்கும், ஏனெனில் அதில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. சீரக நீரில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
நீரிழிவுக்கு மருந்தாகும் சீரகம்
சீரக தண்ணீர் குமட்டல், வாந்தி, வயிறு உப்புதல், மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு தீர்வாக இருக்கிறது. முக்கியமாக, டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, சாப்பிடுவதற்கு முன்பாக இருக்கும் சர்க்கரை அளவை, சீரகம் சீராக்குவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. சீரகத்தில் தைமோக்யூனியன் என்ற வேதியல் பொருள், ரத்த குளுக்கோஸை குறைக்க உதவுகிறது.
சீரக பானம் தயாரிக்கும் முறை
சீரக பானம் தயாரிக்க, 2 ஸ்பூன் சீரகத்தை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆறிய பின் பருத்தி துணியால் வடிகட்டவும். கடைசியாக இந்த பானத்தில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். 2-3 வாரங்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால், அதன் பலனை கண்கூடாட்க பார்க்கலாம்.
நீங்கள் விரும்பினால், நீங்கள் சீரகத்தை பச்சையாக மென்று சாப்பிடலாம். இருப்பினும், சீரக பானத்தை எளிதில் தயார் செய்ய விரும்பினால், அதை அரைத்து பொடி செய்து, ஒரு டீஸ்பூன் சீரகப் பொடியை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும். உணவுக்குப் பிறகு இந்த பானத்தை குடித்தால், அதிக பலன்கள் கிடைக்கும்.எனவே அன்றாடம் சீரகம் எடுத்து கொள்வதை வழக்கமாக்கினால் எடை பருமன் குறையும்.
சீரகத்தை தண்ணீரில் ஊற வைப்பதனால் பல நன்மைகளை கிடைக்கின்றன. இந்த இயற்கையான செயல்முறையின் சீரகத்திலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் கலக்கின்றது. சீரகத்திலிருந்து வெளி வந்த ஊட்டச்சத்து தண்ணீரில் மஞ்சள் நிறத்தில் கலந்து விடுகிறது. மேலும், சீரக தண்ணீர் மிக குறைந்த கலோரி உள்ள பானம்.
No comments:
Post a Comment