Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 6, 2023

தேசிய கைத்தறி தினம் கட்டுரை போட்டி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தேசிய கைத்தறி தினத்தையொட்டி, காஞ்சிபுரம் பட்டுப்பூங்கா நிர்வாகம் சார்பில், கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் கீழ்கதிர்பூரில் இயங்கி வரும், அண்ணா நினைவு கைத்தறி பட்டுப்பூங்கா இயக்குனர் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒன்பதாவது தேசிய கைத்தறி தினம், காஞ்சிபுரம் கீழ்கதிர்பூரில் உள்ள பட்டுப்பூங்காவில் நடைபெறுகிறது. இதையொட்டி, பட்டுப்பூங்கா நிறுவனத்தின் சார்பில், தற்போது ஆடை உற்பத்தி பெருகி வரும் சூழ்நிலையில், கைத்தறி ஆடைகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற உள்ளது.

கட்டுரைகள் வரும் 6ம் தேதி, மாலை 5:30 மணிக்குள், 88257 84926 என்ற, வாட்ஸாப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம். கட்டுரை எழுத முடியாதவர்கள் குரல் மூலம் அதே, வாட்ஸாப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம். போட்டி முடிவுகள் கைத்தறி தினமான, வரும் 7ம் தேதி அறிவிக்கப்பட்டு, அன்றே பரிசுகள் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News