Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்த பதிவில் சொரிசிறங்கு தீராத அரிப்பு சொரியாசிஸ் போன்ற சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஒரு மூலிகை பற்றி பார்ப்போம்.
சருமத்தில் அரிப்பு ஏற்படுவது எதனால் என்றால் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் வெளியேறுவதனால் தான் நமக்கு அரிப்பு ஏற்படுகிறது.
உடலில் இருக்கக்கூடிய ரத்தம் சுத்தமாக இல்லாவிட்டாலும் இது போன்ற சொறி சிரங்கு சரும அரிப்பு சொரியாசிஸ் போன்ற நோய்கள் ஏற்படலாம். சர்க்கரை நோய் சிறுநீரகப் பிரச்சனை இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற பாதிப்பு இருப்பவர்களுக்கும் இது போன்ற சரும பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
சில பேருக்கு சாப்பிடக்கூடிய உணவு வகைகள் சேராவிட்டாலும் இது போன்ற சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது. கோழிக்கறி சாப்பிடுவது சில பேருக்கு சேராது இதனால் ஏராளமானோருக்கு தோளில் அரிப்பு பிரச்சனை தடிப்பு தடிப்பாக வருதல் சருமம் சிவந்து போதல் போன்றவை ஏற்படுகிறது.
சிலருக்கு வெயில் காலங்களில் மழை காலங்களில் பாதிப்பு ஏற்பட்டு சருமத்தில் இதுபோன்று அரிப்பு சொரியாசிஸ் சொரி சிரங்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதற்காக செயற்கையான முறையில் பலவற்றையும் உபயோகப்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கையான முறை முறையில் இதுக்கான ஒரு சிறந்த மருந்தை இங்கு பார்ப்போம்.
செய்முறை:
இதற்கு நமக்கு தேவைப்படும் மூலிகைச் செடி குப்பைமேனி. குப்பைமேனி மேனியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.
இந்த குப்பைமேனி செடியின் இலைகளை பறித்து வந்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். இடையில் தேவையான அளவு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த குப்பைமேனி இலையில் இருந்து அரைத்து எடுக்கப்பட்ட பேஸ்ட்டை சொரிசிறங்கு சொரியாசிஸ் சரும அரிப்பு இருக்கும் இடங்களில் தடவி ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்டு பிறகு நன்றாக குளித்து விடவும். இவ்வாறு பத்து நாட்களுக்கு தொடர்ந்து செய்து வர சருமம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.
No comments:
Post a Comment