Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் வாழக்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமார் 1 கோடி பெண்களுக்கு வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். அதற்கான பணிகள் தற்பொழுது தமிழக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை மகளிர் பெற அலைய தேவையில்லை. நியாய விலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று அதனை வழங்கி வருகின்றனர். இந்த விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கும் அந்தந்த ஊரிலேயே சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் முதல்கட்ட பணியில் தற்போது 75 லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் சரிபார்க்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு குடும்ப தலைவிகள் ரூபாய் 1000 உரிமைத் தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவரா என்கிற விவரங்களும் மொபைல் நம்பருக்கு நேரடியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment