Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 3, 2023

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு - பதவி உயர்வு சார்ந்த குழப்பங்களுக்கு NCTE மூலமாக தீர்வுகாண முயற்சி


தமிழ்நாட்டில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் அடுத்த பதவி உயர்விற்கு தகுதி தேர்வு தேவை என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் தீர்ப்புக்கு உரிய தீர்வு அளிக்க வேண்டி மத்திய கல்வி அமைச்சர் மற்றும் நமது அகில இந்திய அமைப்பான ABRSM வழிகாட்டுதலின் பேரில் தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் (NCTE) உறுப்பினர் செயலர் ( Member Secretary).திருமதி.கேசங் ஒய் ஷெர்பா. IRS அவர்களை சந்தித்து RTE 2009 சட்டப்படியும் அதற்கு பின் வந்த அரசு ஆணைகளின்படியும் 23.8.2010 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு தகுதி தேர்வு அவசியமில்லை என்று தேசிய ஆசிரியர் சங்க மாநில தலைவர் திரிலோகசந்திரன் பொதுச்செயலாளர் கந்தசாமி மற்றும் மாநில நிர்வாகிகள் இராகவன், முருகன், பூங்குழலி ஆகியோரால் விளக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பில் உரிய அரசு ஆணைகளுடன், நீதி மன்ற தீர்ப்பு குறித்தும் விளக்க மனு அளித்து உரிய தீர்வு காண, சுமார்30 நிமிடங்களுக்கும் மேலாக பொறுமையுடன் நமது விளக்கங்களைக் கேட்டு சில நாட்களில் பதிலளிப்பதாகவும் 23-08-2010 முன்பு நியமனம் பெற்றோர் பதவி உயர்வு பெற TET தேர்ச்சி தேவை இல்லை எனவும் அதன் பிறகு பணி நியமனம் பெற்றோர் மட்டுமே பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் TET தேர்ச்சி பெறவும் வேண்டும் எனவும் இது குறித்த தெளிவுரையை நீதி மன்ற தீர்ப்பை நன்கு ஆராய்ந்த பின் வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். அவருக்கு தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது🙏. தமிழ்நாட்டில் எந்த ஒரு சங்கமும், அகில இந்திய அளவில் முன்னெடுக்காத செயல்பாட்டை தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு, ஆசிரியர் நலனுக்காக செயல்படுத்தியுள்ளது.

தேசிய கல்விப்பணியில்

மு.கந்தசாமி
பொதுச்செயலாளர்
தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News