Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆலங்குடி அருகே, அரசு பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவர்களுக்கு, மாற்றுச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயதுள்ள இரண்டு மாணவர்கள், அதே வகுப்பில் படிப்பவர்களின் தண்ணீர் பாட்டில் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள், பெற்றோரிடம் தெரிவித்ததால், பள்ளிக்கு சென்ற பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் ராஜேந்திரனிடம் புகார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, தலைமை ஆசிரியர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளாவுக்கு தகவல் அளித்துள்ளார். நேற்று, பள்ளிக்கு சென்ற முதன்மைக் கல்வி அலுவலர், புகாருக்குள்ளான மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, விசாரணை செய்தார்.
அப்போது, இரண்டு மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து, அருகில் உள்ள வெவ்வேறு அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்குமாறு அனுப்பி வைத்தார்.
மேலும், அரசு மனநல மருத்துவர் பாலமுருகன், பள்ளியில் மாணவ, மாணவியருக்கு, 'கவுன்சிலிங்' வழங்கினார்.
No comments:
Post a Comment