Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 7, 2023

விரைவில் அறிமுகமாகும் 'WhatsApp" இ-மெயில் வெரிஃபிகேஷன் அம்சம்!

வாட்ஸ் ஆப் செயலியில் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இமெயில் வெரிஃபிகேஷன் அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் செயலியை இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் ஆப்க்கு பயனர்களாக உள்ளார்கள். இந்த வாட்ஸ் ஆப் பிறருடன் தகவல்களை எளிதில் பகிர்ந்துக் கொள்ளவும், பயனர்கள் விரும்பும் பல முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

ஆடியோ, வீடியோ காலிங் வசதி, ஸ்டேட்டஸ் அப்டேட், மெசேஜிங் வசதி, குரூப் சேட் எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய வசதிகளை பயனர்களின் வசதிக்கு ஏற்ப தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. சமீபத்தில் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது. அந்த வகையில் 'லாக் சாட்' என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இமெயில் வெரிஃபிகேஷன் என்ற அம்சத்தை வாட்ஸ் ஆப் சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை வாட்ஸ்அப் அப்டேட் சார்ந்த தகவலை வெளியிட்டு வரும் Wabetainfo தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்டா நிறுவனம் அதிகாரபூர்வமாக தகவல் ஏதும் வெளியிடவில்லை.

இமெயில் வெரிஃபிகேஷன் அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்கள் கணக்குகளை மொபைல் எண் இல்லாமல் சரிபார்த்துக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது. இது ஹேக்கர்கள் வசமிருந்து பயனர்கள் தங்கள் கணக்குகளை பாதுகாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த அம்சம் சார்ந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனை பயனர்கள் ஆப்ஷனலாக பயன்படுத்தலாம் என்றும் தெரிகிறது. விரைவில் இந்த அம்சம் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News