Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டில் 960 இடங்களும், நிர்வாக ஒதக்கீட்டில் 540 இடங்களும் உள்ளன.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடக்கும் மாணவர் சேர்க்கைக்கு, 2,783 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 1,990 பேர்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 723 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.இதற்கான தரவரிசை பட்டியலை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று வெளியிட்டார்.
மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும் 11ம் தேதி காலை 7:00 மணியளவில், சென்னை, அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து, 14ம் தேதி, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.
எம்.எல்.ஏ.,வுக்கு லேசான காயம்!இந்த நிகழ்ச்சியில், அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ., மோகன் பங்கேற்றார். அப்போது, நிகழ்ச்சி முடித்து படிக்கட்டில் கீழே இறங்கி வந்தபோது, கால் இடறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
No comments:
Post a Comment