Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஆதிதிராவிட நல விடுதிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. உத்தரவு விவரம்:
தருமபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூா், சேலம், ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விருதுநகா், கோவை ஆகிய மாவட்டங்களில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களை முழு நேர பணியாளா்களாக மாற்றி, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டுமென ஆதிதிராவிடா் நல இயக்குநா் தரப்பில் இருந்து அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கையை ஏற்று, 98 தூய்மைப் பணியாளா்களும் முழு நேர பணியாளா்களாக மாற்றப்பட்டு, அவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் அளிக்கப்படும்.
ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டும், விடுதிகளை தூய்மையாக பராமரிப்பதன் அவசியத்தைக் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment