Join THAMIZHKADAL WhatsApp Groups
துலாம் ( சித்திரை 3, 4 பாதங்கள் , சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு (வ), ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலைகள் உள்ளது.
கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: வீண் வாக்குவாதம் ஏற்படும் வாரம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். பழைய வீட்டை புதுப்பிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். வாகன வசதி ஏற்படும். பெண்களுக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.
மாணவர்களுக்கு பதற்றம் கொள்ளாமல் நிதானமாக பாடங்களை படிப்பது நல்லது. ஆசிரியர்களால் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். அரசியல்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீகாளியம்மனை வணங்கி வலம் வந்தால் தொழிலில் ஏற்றம் ஏற்படும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ), ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.
கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும் வாரம். உடல் ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். தேவையான உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு உண்டாகலாம்.
சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.
மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு செலவுகள் கூடும். அரசியல்துறையினருக்கு பேச்சில் நிதானம் அவசியம்.
பரிகாரம்: செவ்வாயன்று விரதம் இருந்து முருகனை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். நன்மை ஏற்படும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ), ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.
கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: பொறுப்புகள் அதிகரிக்கும் வாரம். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். உறவினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரலாம்.
காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அரசியல்துறையினருக்கு நிலுவையில் உள்ள பணம் வரும். கலைத்துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று பெருமாளை வணங்க வாழ்வு வளம் பெறும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
No comments:
Post a Comment