Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளி மாணவ, மாணவிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை பெறும் வகையிலான இலக்கிய திறனறித் தோவுக்கு, வரும் செப்டம்பா் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சரஸ்வதி தெரிவித்தாா்.
பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்மொழி இலக்கியத் திறனை மாணவ, மாணவிகள் மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில், இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், நிகழாண்டுக்கான இலக்கிய திறனறித் தேர்வு அக். 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வில் சிறப்பிடம் பெறும் 1,500 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறை மூலம் மாதந்தோறும் ரூ. 1,500 வீதம் தேர்வு செய்து 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் தலா 50 சதவீதம் அரசுப் பள்ளி மற்றும் தனியாா் மாணவா்களும் தேர்வு செய்யப்பட உள்ளனா்.
தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான தமிழ்பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். மேற்குறிப்பிட்ட நாளில் நடைபெற உள்ள இலக்கிய திறனறித் தேர்வுக்கு திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ளஅங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவா்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரும் 20-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து, ரூ. 50 கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம் என அவா் தெரிவித்தாா்.
No comments:
Post a Comment