Join THAMIZHKADAL WhatsApp Groups
கிராம்பில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. கிராம்பு தண்ணீரில் கொதிக்கவைத்து தேன் கலந்து குடிக்கலாம்.
தினமும் 2 கிராம்புகளுடன் நாளைத் தொடங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
இதில் வைட்டமின் சி உள்ளது. வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் உடலை எந்த நோய்த்தொற்றிகளும் நெருங்காமல் பார்த்துகொள்ளும்.
செரிமான மண்டம் சீராக இயங்க வேண்டும். அதற்கு காலையில் கிராம்பைஉட்கொள்வது செரிமான பிரச்சனைகளுக்கு உதவும். கிராம்பு செரிமான திரவங்களை சுரப்பை அதிகரிக்கிறது. மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது.
கல்லீரல் செயல்பாட்டை ஆரோக்கியமாக்க, நீங்கள் தினமும் சாப்பிடுவது நன்மை பயக்கும். கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
பல்வலியை தடுக்க கிராம்பு எண்ணெய் பொதுவாகபற்களில் பயன்படுத்தப்படுகிறது. கிராம்புகளை உட்கொள்வது பல்வலியைக் குறைக்கவும் உதவும். கிராம்பு பற்களில் உண்டாகும் அசெளகரியத்தை சரி செய்ய உதவுகிறது. பல் வலி, ஈறுகளில் வலி இருந்தாலும் அந்த இடத்தில் கிராம்பு வைத்தால் வலியைத் தணிக்கும்.
கிராம்பில் ஃபிளாவனாய்டுகள், மாங்கனீசு மற்றும் யூஜெனோல் உள்ளன. அவை எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. கிராம்புகளை உட்கொள்வது எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.
காலையில் 2 கிராம்புகளை வாயில் அப்படியே வைத்திருந்தால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றிவிடும். இது உங்கள் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. கிராம்பு மற்றும் துளசி பயன்படுத்தி வீட்டில் மவுத்வாஷையும் தயார் செய்யலாம்.
சர்க்கரை நோயாளிகள்,தினமும் உணவில் கிராம்பு சேர்க்க வேண்டும். கிராம்பு உங்கள் உடலில் இன்சுலின் போல வேலை செய்கிறது. அதாவது, இரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்குவதன் மூலம், அவை இரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது.
No comments:
Post a Comment