Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 14, 2023

எம்பிபிஎஸ், பிடிஎஸ் 3-ம் சுற்று கலந்தாய்வு இன்று நிறைவு: முடிவுகள் செப். 16-ம் தேதி வெளியீடு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு ஒதுக்கீட்டில் காலியாக இருந்த 56 எம்பிபிஎஸ், 104 பிடிஎஸ் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 216 எம்பிபிஎஸ், 399 பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான 3-ம் சுற்று கலந்தாய்வு செப். 11-ல் ஆன்லைனில் தொடங்கியது. இன்றுடன் கலந்தாய்வு நிறைவடைகிறது.

செப். 16-ம் தேதி www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய சுகாதாரத் துறை இணையதளங்களில், இடஒதுக்கீடு பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்படுகின்றன.

செப். 17-ம் தேதி முதல் 21-ம் தேதி மாலை 5 மணி வரை இடஒதுக்கீட்டு ஆணையை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செப். 22-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும் என்று மருத்துவக் கல்வி,ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News