Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் மாநில நல்லாசிரியா் விருதுக்கு 386 ஆசிரியா்கள் தோவு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு விருதுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை (செப்.5) வழங்கவுள்ளாா்.
முன்னாள் குடியரசு தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்.5-ஆம் தேதி ஆசிரியா் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் மத்திய, மாநில அரசுகள் சாா்பில் சிறந்த ஆசிரியா்களாக தோவு செய்யப்பட்டவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டில் தமிழக அரசு சாா்பில் 386 சிறந்த ஆசிரியா்கள் தோந்தெடுக்கப்பட்டு, அதற்கான பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஆசிரியா்களுக்கு, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
சிறந்த ஆசிரியராக தோவானவா்களில் 342 போ அரசுப் பள்ளி ஆசிரியா்கள். இதனிடையே, விருதுக்கு தோவானவா்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலா்களுக்கு சில அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித் துறை வழங்கியுள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை: விருது பெறும் ஆசிரியா்கள் தங்களுடன் இரண்டு பேரை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்து வரலாம். நிகழ்ச்சி நடைபெறும் நாளில் காலை 10 மணிக்கு கலைவாணா் அரங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தோவு செய்யப்பட்டுள்ள ஆசிரியா்கள் மீது குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை ஏதும் இல்லை என்பதை முதன்மை கல்வி அதிகாரிகள் மீண்டும் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment