Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 4, 2023

வீட்டு கடன் வேணுமா? வீடு கட்ட போறீங்களா? வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா? அப்ப இந்த 5 தகவல்கள் உங்களுதான்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
10 வருடம் ஒரு வீட்டில் குடியிருந்தால், அந்த வீடு வாடகைதாரருக்கு சொந்தமாகிவிடுமா? வாடகைதாரருக்கும் சட்டம் உள்ளதா? அந்த சட்டம் என்ன சொல்கிறது? வீட்டுக்கடன் வசதியை பெற முடியுமா? வாடகை வீடு என்றாலும்கூட, இதற்கும் சில சட்டங்கள் உள்ளன.. சில உரிமைகளும் உள்ளன. இவைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அப்படியானால், வாடகைதாரர்களும் சரி, வீட்டு ஓனர்களும் சரி, எந்தெந்த பிரச்சனை ஏற்பட்டால், கோர்ட்டில் முறையிடலாம் தெரியுமா? முக்கியமாக, வாடகைதாரரும், வீட்டு ஓனரும் முதலில் ஒப்பந்தப் பத்திரம் எழுதிக்கொள்வதுடன், வாடகை, பராமரிப்பு, கரண்ட் பில், அட்வான்ஸ் என அந்த பத்திரத்தில் தெளிவாக குறிப்பிட்டு கொள்ள வேண்டும்.. வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பது, வாடகைக் கட்டணத்தை உயர்த்துவது குறித்தெல்லாம் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் பிரச்சனையே இல்லை.. 20 ரூபாய் முத்திரைத்தாளில் அங்கீகரிக்கப்பட்ட முத்திரை விற்பனையாளரிடம் வாங்கி, வாடகைதாரர் - உரிமையாளர் இருவருமே பத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும்.. 11 மாதத்திற்கு ஒருமுறை மறக்காமல் அதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.. ஆனால், 11 மாத காலத்திற்கு மேற்பட்ட பத்திரப்பதிவுகளை, பத்திர ஆபீசில்தான் பதிவு செய்ய வேண்டும்.. உறவினர்கள்: ஒப்பந்தம் முடிந்தும் அடுத்ததாக எந்த ஒரு ஒப்பந்தமும் போடவில்லை என்றாலும், வாடகைக்கு குடியிருப்பவர் தொடர்ந்து 6 மாதம் அந்த வீட்டில் குடியிருக்கலாம். அதேபோல வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டவர் துரதிர்ஷ்டவசமாக இறந்துபோகும் சமயத்தில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் ஒப்பந்தம் முடியும் வரை அந்த வீட்டில் தங்கிக்கொள்ளலாம். மாதந்தோறும் வாடகையை தந்துவிட்டு, குடியிருப்பவர்களில் எத்தனை வருடங்களானாலும் வீட்டை உரிமைகோர முடியாது என்பதை மறந்துவிடக்கூடாது.. அதேசமயம், ஏதாவது இடையூறு இருந்தால், வாடகைதாரர் அல்லது வீட்டு ஓனர் இவர்களில் யார் வேண்டுமானாலும் கோர்ட்டுக்கு சென்று முறையிடலாம். முறையிடலாம்: ஒருவேளை, வீட்டு ஓனர் திடீரென வாடகையை உயர்த்திவிட்டால், அந்த வாடகை உயர்வில் வாடகைதாரருக்கு விருப்பம் இல்லையென்றால், கோர்ட்டில் சென்று முறையிடலாம். அதேபோல, வீட்டு ஓனரும், வாடகைக் கட்டணம் உயர்த்தும்போது வாடகைதாரர் ஒத்துக்கொள்ளாதபட்சத்தில், கோர்ட்டுக்கு சென்று முறையிடலாம். ஆனால், எதற்காக வீட்டு வாடகை உயர்த்தப்படுகிறது என்ற காரணத்தை ஓனர் கோர்ட்டில் தெளிவாக சொல்ல வேண்டும். ஹவுஸ் ஓனர் திடீரென வீட்டை காலி செய்ய சொல்வது, தண்ணீர், கரண்ட் போன்ற அத்தியாவசியமான தேவைகளை நிறுத்திவிடுவது, இப்படியெல்லாம் தொந்தரவுகள் தந்தால், வாடகைதாரர் உரிமையியல் கோர்ட்டில் சென்று முறையிடலாம்.. இதுபோன்ற வழக்குகள் எல்லாம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அப்போதே தீர்வும் காணப்படும்.. வாடகை வீட்டுதாரர்கள்: இதனிடையே, வாடகை வீட்டுக்காரர்களும், சொந்த வீடு கட்டிக்கொள்ளும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.. நகர்புறங்களில் வாழும் ஏழை, நடுத்தர மக்கள் சொந்த வீடு வாங்கும் வகையில், கடன் மானியம் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த போகிறதாம்.. அதாவது, இத்திட்டத்தின் கீழ் வீடு கட்ட வங்கியில் கடன் பெறுபவர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு வீட்டு வசதி வழங்கும் நோக்கில் மத்திய அரசு 2015-ம் ஆண்டு ஆவாஸ் யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்த நிலையில், இப்போது, மத்திய அரசு அறிமுகப்படுத்த இருக்கும் திட்டம், ஆவாஸ் யோஜனா திட்டத்தின் விரிவாக்கமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பொருளாதாரம்: மத்திய அரசு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதென்றால், தமிழக அரசும், இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.. அதாவது. "பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நறிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1500 குடும்பங்களுக்கு வீடுகள் ரூ.45 கோடி மதிப்பீட்டில் தகுதியின் அடிப்படையில் கட்டித்தரப்படும்" என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறிப்பாக, 2023-24ம் ஆண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என 1500 பழங்குடியினர்களுக்கு தமிழ்நாட்டில், 19 மாவட்டங்களில் வீடுகள் கட்டுவதற்காக 79 கோடியே 28 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்குடு செய்தும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இன்ப அதிர்ச்சி: மேற்கண்ட 1500 வீடுகளை விரைந்து கட்டி முடித்திட தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்: மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா? இதற்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும். பிறகு, 'Citizen Assessment' என்ற ஆப்ஷன் இருக்கும்.. அதனுள் சென்றால், 'Online Application' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது ஆன்லைனில் விண்ணப்பிக்க, "In Situ Slum Redevelopment" ஆக்‌ஷனை தேர்வு செய்து, ஆதார் எண், பெயர் போன்றவற்றை சரியாக பூர்த்தி செய்யவும். இப்போது Format A என்ற பக்கம் வரும். அதில், மாநிலத்தின் பெயர், மாவட்டத்தின் பெயர், நகரத்தின் பெயர், திட்டமிடல் பகுதி / மேம்பாட்டு பகுதி, குடும்பத் தலைவரின் பெயர், பாலினம், தந்தையின் பெயர், குடும்பத் தலைவரின் வயது, இப்போதைய முகவரி, தொடர்பு வருகை, நிரந்தர முகவரி போன்ற விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ஆதார் எண் கேட்கும்போது, அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். பிறகு திரையில் காட்டப்பட்டுள்ள கேப்ட்சாவையும் பூர்த்தி செய்தால் போதும்.. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கான உங்கள் விண்ணப்பம் இப்போது சமர்பிக்கப்பட்டிருக்கும். தேவையான ஆவணங்கள் (மாத சம்பளம் பெறுவோருக்கு) : ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், நிரந்தர முகவரி விவரங்கள், கடந்த ஆறு மாதங்களின் வங்கி அறிக்கை, படிவம் 16/வருமான வரி மதிப்பீட்டு ஆணை, கட்டுமானம் பற்றிய தகவல்கள், கட்டுமான ஒப்பந்த விவரங்கள், அட்வான்ஸ் ரசீது போன்றவை தேவை. அதேபோல, வாக்குமூலம் அதாவது, விண்ணப்பதாரருக்கு நாட்டில் எங்குமே நிரந்தர வீடு இல்லை என்ற வாக்குமூலம், ஹவுசிங் சொசைட்டி அல்லது தகுதிவாய்ந்த அதிகாரியிடம் NOC எடுக்க வேண்டியது அவசியம். பிறருக்கு தேவையான ஆவணங்கள்: அடையாள அட்டை (ஆதார் அட்டை, வாட்டர் ஐடி கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம்), சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், படிவம் 16, வணிக விஷயத்தில் தேவையான ஆவணங்கள், கடந்த ஆறு மாதங்களின் வங்கி அறிக்கை, கட்டுமான திட்டம் விபரங்கள், அட்வான்ஸ் பணம் செலுத்திய தகவல், சொத்து/ஒப்பந்தத்தின் ஒதுக்கீடு கடிதம், பிரமாணப் பத்திரம் (உங்களுக்கு இந்தியாவில் எங்கும் நிரந்தர வீடு இல்லை என்று அதில் எழுதப்பட்டுள்ளது)

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News