Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 9, 2023

6 - 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுள்ளது. 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது.

ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது.

தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

6-ம் வகுப்பு: அதன்படி, 6ம் வகுப்பு மாணவர்களுக்கு 19ம் தேதி தமிழ் தேர்வு(லேங்குவேஜ்) நடைபெறும். 20ம் தேதி ஆப்ஷனல் மொழித் தேர்வு நடைபெறும். 21-ம் தேதி ஆங்கில தேர்வு நடைபெறும். 22ம் தேதி பிசிக்கல் எஜுகேஷன் தேர்வும், 25-ம் தேதி கணித தேர்வும் நடைபெறும். 26ம் தேதி அறிவியல் தேர்வும், 27ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறும். 6-ம் வகுப்பை பொறுத்தவரை அனைத்து தேர்வுகளும் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.00 மணிக்கு முடியும்.

7ம் வகுப்பு: 7ம் வகுப்பு மாணவர்களுக்கு 19ம் தேதி தமிழ் தேர்வு(லேங்குவேஜ்) நடைபெறும். 20ம் தேதி ஆப்ஷனல் மொழித் தேர்வு நடைபெறும். 21-ம் தேதி ஆங்கில தேர்வு நடைபெறும். 22ம் தேதி பிசிக்கல் எஜுகேஷன் தேர்வும், 25-ம் தேதி கணித தேர்வும் நடைபெறும். 26ம் தேதி அறிவியல் தேர்வும், 27ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறும். 8-ம் வகுப்பை பொறுத்தவரை அனைத்து தேர்வுகளும் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.00 மணிக்கு முடிவடையும்.

8ம் வகுப்பு: 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 19ம் தேதி தமிழ் தேர்வு (லேங்குவேஜ்) நடைபெறும். 20-ம் தேதி ஆப்ஷனல் மொழித் தேர்வு நடைபெறும். 21-ம் தேதி ஆங்கில தேர்வு நடைபெறும். 22ம் தேதி பிசிக்கல் எஜுகேஷன் தேர்வும், 25-ம் தேதி கணித தேர்வும் நடைபெறும். 26-ம் தேதி அறிவியல் தேர்வும், 27-ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறும். 8-ம் வகுப்பை பொறுத்தவரை அனைத்து தேர்வுகளும் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.00 மணிக்கு முடியும்.

9-ம் வகுப்பு: 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 19ம் தேதி முதல் தேர்வு தொடங்குகிறது. 19-ம் தேதி தமிழ் தேர்வு (லேங்குவேஜ்) நடைபெறும். 20-ம் தேதி ஆங்கில தேர்வு நடைபெறும். 22ம் தேதி பிசிக்கல் எஜுகேஷன் தேர்வு நடைபெறும். 25-ம் தேதி கணித தேர்வு நடைபெறும். 26-ம் தேதி அறிவியல் தேர்வும், 26-ம் தேதி அறிவியல் தேர்வு நடைபெறும். 27-ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறும். 9-ம் வகுப்பை பொறுத்தவரை அனைத்து தேர்வுகளும் மதியம் 2.00 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு முடிவடையும்.

10-ம் வகுப்பு: 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 19ம் தேதி முதல் தேர்வு தொடங்குகிறது. 19-ம் தேதி தமிழ் தேர்வு (லேங்குவேஜ்) நடைபெறும். 20-ம் தேதி ஆங்கில தேர்வு நடைபெறும். 22ம் தேதி கணித தேர்வு நடைபெறும். 25-ம் தேதி அறிவியல் தேர்வும், 26-ம் தேதி ஆப்ஷனல் லேங்குவேஜ் தேர்வு நடைபெறும். 27-ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறும். 10-ம் வகுப்பை பொறுத்தவரை அனைத்து தேர்வுகளும் மதியம் 2.00 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு முடிவடையும்.

11ம் வகுப்பு: 11ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.45 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 12.45 மணி வரை தேர்வு நடைபெறும். எனினும் கேள்வித்தாளை வாசிப்பதற்கு 10 நிமிடம், சரிபார்ப்பதற்கு 5 நிமிடம் என 15 நிமிடம் முன்னதாகவே தேர்வு அறைக்கு செல்ல வேண்டும். அதன்படி 15ம் தேதி மொழித்தேர்வு (லேங்குவேஜ்) தமிழ் மொழி தேர்வு நடைபெறும். 19ம் தேதி ஆங்கில தேர்வு நடைபெறும். 20ம் தேதி இயற்பியல், பொருளாதாரம் தேர்வு நடைபெறும்.

21-ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதவியல் தேர்வு நடைபெறும். 22ம் தேதி வேதியல், புவியியல், அக்கவுண்டசி (கணக்குப் பதிவியல்) தேர்வு நடைபெறும். 25ம் தேதி பையோ கெமிஷ்டிரி, கம்யூட்டர் சயின்ஸ், எத்திக்ஸ் அண்ட் இந்தியன் கல்சர் தேர்வு நடைபெறும். 27-ம் தேதி கணிதம், விலங்கியல், காமெர்ஸ், மைக்ரோ பையாலஜி தேர்வு நடைபெறும்.

12ம் வகுப்பு: 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 15ம் தேதி மொழித்தேர்வு (லேங்குவேஜ்) தமிழ் மொழி தேர்வு நடைபெறும். 19ம் தேதி ஆங்கில தேர்வு நடைபெறும். 20ம் தேதி பையோ கெமிஷ்டிரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், பொலிடிக்கல் சயின்ஸ், எத்திக்ஸ் அண்ட் இந்தியன் கல்சர் தேர்வு நடைபெறும். 21ம் தேதி இயற்பியல், பொருளாதாரம் தேர்வு நடைபெறும். 22-ம் தேதி கணிதம், விலங்கியல், காமெர்ஸ், மைக்ரோ பையாலஜி தேர்வு நடைபெறும்.

25-ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதவியல் தேர்வு நடைபெறும். 27ம் தேதி வேதியல், புவியியல், அக்கவுண்டசி (கணக்குப் பதிவியல்) தேர்வு நடைபெறும். மதியம் 1.30 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 4.30 மணி வரை தேர்வு நடைபெறும். எனினும் கேள்வித்தாளை வாசிப்பதற்கு 10 நிமிடம், சரிபார்ப்பதற்கு 5 நிமிடம் என 15 நிமிடம் முன்னதாகவே அதாவது மதியம் 1.15 மணிக்கே தேர்வு அறைக்கு செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment