Join THAMIZHKADAL WhatsApp Groups
எஸ்பிஐ (பாரத ஸ்டேட் வங்கி) வங்கியில் 6,160 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்.21-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது 6,160 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிக்க கடைசி தேதி 2023 செப்.21-ம் தேதியாகும். இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ அதிகாரப்பூர்வ தளமான sbi.co.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப காலக்கெடு அதன்பிறகு நீட்டிக்கப்படாது என்பதால், விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்தவொரு விண்ணப்பதாரரின் தவறான படிவமும் எஸ்பிஐயால் ஏற்றுக்கொள்ளப்படாது. அத்துடன் முழுமையற்ற ஆவணங்களைக் கொண்ட படிவங்கள் நிராகரிக்கப்படும் என்பதால், விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாரத ஸ்டேட் வங்கி
ஆன்லைன் எழுத்துத் தேர்வு அக்டோபர்/நவம்பர் 2023-ல் நடத்தப்படும். எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலும் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது தவிர, பட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வு எழுதவுள்ள மாணவர்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இருப்பினும், தேர்வின் போது, அவர்கள் இறுதி மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment