Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 9, 2023

எஸ்பிஐ வங்கியில் 6160 காலிப்பணியிடங்கள்

எஸ்பிஐ வங்கியில் 6160 காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளே பண்ணுங்க நண்பர்களே!!

இந்திய பொதுத்துறை வங்கியில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி (SBI) காலியாக உள்ள 6160 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு sbi.co.in என்ற இணையதளத்தில் தற்பொழுது வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கியில் ஆட்சேர்ப்பு பணி நடைபெற உள்ளது.

நிறுவனம்: பாரத ஸ்டேட் பேங்க்

காலிப்பணியிடங்கள்: நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கியில் 6,160 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.

பணி : தொழில்பழகுநர் (Apprentice)

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை (Graduation) படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி காலம்: ஒரு வருடம்

மாத சம்பளம்: ரூ. 15,000/- வழங்கப்படும்.இதர ஊதிய நலன்கள் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் பாரத ஸ்டேட் பேங்க்
நடத்தும் இணைய வழி எழுத்துத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழி அறிவு (Test of Local Language) உள்ளிட்டவற்றில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பிக்க ரூ.300/- கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில் பட்டியலின,பழங்குடியின,மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

https://nsdcindia.org/apprenticeship (அல்லது) https://apprenticeshipindia.org (அல்லது) https://bfsissc.com (அல்லது) https://bank.sbi/careers (அல்லது) https://www.sbi.co.in/ careers உள்ளிட்ட இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

தேதி: 01.09.2023 முதல் 21.09.2023 வரை விண்ணப்பிக்கலாம்.இந்த தேதிக்குள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: விண்ணப்பத்தார் பணி செய்ய எந்த மாநிலத்தை தேர்வு செய்கிறாரோ அந்த மாநில மொழியில் அவருக்கு நன்கு எழுத,படிக்க,பேச அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

உதாரணம்:தமிழ்நாட்டில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு தமிழ் மொழியில் நன்கு எழுத,படிக்க,பேச தெரிந்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment