Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 6, 2023

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? (பலன்கள் @ செப்.7 - 13)

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) | பலன்கள்: எந்த குழப்பத்திலும் தெளிவான முடிவெடுக்கும் உங்களுக்கு இந்த வாரம் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். அதனால் மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். பெற்றோர் உடல் நிலையில் கவனம் தேவை.

பெண்களுக்கு புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும். அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: விநாயகருக்கு சனிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) | பலன்கள்: உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடையும் உங்களுக்கு இந்த வாரம் சுபநிகழ்ச்சிகளில் இருந்து வந்த தொய்வு நீங்கும். மற்றவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நல்லபடியாக நடக்கும். புதிய வீடு வாகனம் சேர்க்கை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். மேலிடத்தினால் கொடுக்கப்பட்ட வேலைகளை சரிவர செய்து பாராட்டினைப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீண் வாக்குவாதங்களை அகலும். சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்கு செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளைத் தேடி புதிய பதவிகள் வரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று எள் சாதம் சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) | பலன்கள்: சேமிக்கும் பழக்கம் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும் போதும் கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும்.

தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வேகம் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.

விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். வீடு மனை சம்பந்தமான இனங்களில் அனைத்து விதமான முன்னேற்றம் கிடைக்கும். பெண்களுக்கு நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும். அரசியல்வாதிகள் மேலிடத்தில் கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: குல தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தை போக்கும். செல்வம் செல்வம் செல்வாக்கு உயரச் செய்யும். தடை, தாமதம் நீங்கும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News