Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 6, 2023

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? ( பலன்கள் @ செப்.7 - 13)

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) | பலன்கள்: கால நேரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் உங்களுக்கு இந்த வாரம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும்.

வியாபாரத்தில் மனநிறைவு காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்கு பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். மேலதிகாரிகள் மூலமாக இருந்து வந்த அழுத்தம் அகலும். குடும்பத்தில் வீண் பிரச்சினை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு திருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கும்.

பெண்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். கலைத்துறையினர் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். மாணவர்களுக்கு சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரியமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) | பலன்கள்: கொடுக்கும் வாக்கினை உயிருக்கு சமமாக மதிக்கும் உங்களுக்கு இந்த வாரம் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும்.

வழக்கு விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும்.

பெண்களுக்கு சந்தோஷமான மனநிலை இருக்கும். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். கலைத்துறையினருக்கு உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சினைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) | பலன்கள்: மனதிற்கு இதமளிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தும் உங்களுக்கு இந்த வாரம் மெதுவாக இருந்த பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க இருந்த தாமதம் நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம்.

தொழில் வியாபாரம் வேகமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து ஒரு இனிப்பான செய்தியைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

உறவினர்கள் நண்பர்கள் அனுசரனையுடன் இருப்பார்கள். பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: சித்தர்களை வியாழக்கிழமையில் வணங்கி வர மனஅமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும் | இந்த வாரம் கிரகங்களின் நிலை:


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News