Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 6, 2023

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி. செப்டம்பர் 8 வரை முன்பதிவு. அரசு அறிவிப்பு.!!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான முன்பதிவு வருகின்ற எட்டாம் தேதி வரை பள்ளிகள் சார்பில் மேற்கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் போட்டி நடைபெற உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு பிரிவிலும் ஓவியத்தில் திறன் பெற்றுள்ள ஒரு மாணவரை போட்டியில் பங்கேற்பதற்கு அனுப்பி வைக்கலாம். இதற்கான தாள்கள் அருங்காட்சியகத்தில் வழங்கப்படும்.

பென்சில்கள் மற்றும் வண்ணங்கள் உள்ளிட்ட பொருட்களை மாணவர்கள் கொண்டுவர வேண்டும். வயதுக்கான அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் எனவும் கைபேசிகளுக்கு அனுமதி இல்லை எனவும் மின்னஞ்சலில் மாணவரின் பெயர் மற்றும் வகுப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பள்ளியின் பெயரை சேர்த்து அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய 044 – 2819 3238, 94435 26604, 94892 28435 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News