Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 10, 2023

வீட்டு வரி + சொத்து வரி.. வீட்டிலிருந்தே ஆன்லைனில் வீட்டுவரியை எப்படி செலுத்துவது தெரியுமா?

தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில், வீட்டுவரி மற்றும் கட்டணங்களை ஆன்லைன் மூலமே செலுத்தும் வசதியை ஊரக வளர்ச்சித் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆன்லைனில் வீட்டு வரியை எப்படி செலுத்த வேண்டும் தெரியுமா?

சமீபத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், சட்டசபையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதன்படி, அப்போது, ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் மனைப் பிரிவுகள், கட்டடம், தொழிற்சாலைகள் தொடங்க, தொழில்நடத்துவதற்கான அனுமதி ஒற்றைச் சாளர முறையில் இணையதளம் மூலம் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.

அரசு அறிவிப்பு: அத்துடன், கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் ஆன்லைனில் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்..

தமிழக அரசு இந்த முடிவை எடுக்க காரணம், கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ அல்லது ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியிருக்கிறது... அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு தேவையில்லாத அலைச்சல் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த சேவைகள் அனைத்தும், இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது...

பரிவர்த்தனைகள்: இதற்காகவே, https://onlineppa.tn.gov.in/ என்ற முகவரியும் உருவாக்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் நிதி பரிவர்த்தனைகளை எளிமைப்படுத்தும் விதமாக, மாநில ஒற்றை மைய கணக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.. அதேபோல் கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக https://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது...

கிராம ஊராட்சிகளில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அனுமதி உட்பட அனைத்துமே இந்த இணையதளம் மூலமாக வழங்கப்படுகிறது.. மேலும், ஊரக பகுதிகளில் கட்டடங்களுக்கான அனுமதி வழங்கும் பொறுப்பு கிராம ஊராட்சியின் செயல் அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது,..

பலன்கள்: இந்த இணையதளத்தில், கட்டணங்கள், வரிகளை இணையவழி கட்டணம், ரொக்க அட்டைகள், கடன் அட்டைகள், யுபிஐ கட்டணம், விற்பனை முனைய இயந்திரம்(பிஓஎஸ்) ஆகிய வழிகளில் செலுத்த முடியும். இதற்காக முதல்கட்டமாக 1000 பிஓஎஸ் இயந்திரங்கள் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மனைப்பிரிவுகளுக்கு கிராம ஊராட்சியின் அங்கீகாரம் என்பது நகர ஊரமைப்பு இயக்ககம் அல்லது சிஎம்டிஏவால் வழங்கப்படும் தொழில் முன் அனுமதியை பொறுத்து வழங்கப்படும். கட்டிட அனுமதி என்பது குடியிருப்பாக இருந்தால் 10 ஆயிரம் சதுரடிக்கு மிகாமலும், 8 வீடுகளுக்குள்ளும், 12 மீட்டர் உயரத்துக்கு மிகாமலும், தரை மற்றும் 2 தளங்கள் வரையிலும் ஊராட்சிகள் அனுமதியளிக்கலாம்.

வணிக கட்டிடமாக இருந்தால் 2 ஆயிரம் சதுரடிக்கு உட்பட்டிருந்தால் அனுமதியளிக்கப்படும். அனைத்து கட்டிட அனுமதிகளுக்குமான அனுமதி விண்ணப்பங்களும் இன்று முதல் இணையதளம் வழியாகவே தரப்பட வேண்டும். இந்த விண்ணப்பங்கள் அனைத்துமே ஆன்லைன் வாயிலாகவே பரிசீலிக்கப்படும். கட்டணம் தொடர்பான கேட்புத் தொகையும் ஆன்லைனிலேயே அனுப்பப்படும்.

எப்படி செலுத்துவது: கிராம ஊராட்சிகள் எந்த ஒரு கட்டணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது. இணையதளம் வழியாக ஆன்லைன் பிபிஏ தளத்தின் மூலம் மட்டுமே பெற வேண்டும்.. ஆன்லைனில் வீட்டு வரி எப்படி செலுத்த வேண்டும் தெரியுமா?

- ஆன்லைனில் tnurbanepay.tn.gov.in என்ற அரசின் அதிகார வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்

- இப்போது திரையில் சில ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். அதில், quick payment என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

- இப்போது இன்னொரு புதிய ஸ்கிரீன் ஓபன் ஆகும். அதில், property Tax என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், make payment என்ற கட்டம் தோன்றும். அதில், assessment number என்ற ஆப்ஷன் வரும்..

- நீங்கள் இதற்கு முன்பு கட்டிய வீட்டு வரி ரசீதில் assessment Number என்று ஒரு நம்பர் தரப்பட்டிருக்கும்.. அந்த நம்பரை இந்த கட்டத்துள் பதிவிட வேண்டும். அதற்கு கீழே search என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், இன்னொரு ஸ்கிரீன் வரும். அதில் உங்களுடைய முகவரிகள் தரப்பட்டிருக்கும். அவையெல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை பார்க்க வேண்டும்.

- இதற்கு கீழே, DCB Details என்ற கட்டம் வரும். அதற்கும் கீழே payable payment என்ற இடத்தில், எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்பது பதிவாகி இருக்கும். அதில், பணம் எவ்வளவு என்பதையும் பதிவிட்டு submit தர வேண்டும்.

- இப்போது I agree என்ற கட்டம் வரும். அதில், confirm தந்துவிட வேண்டும்.

- ஒருவேளை வங்கி மூலமாக பணம் செலுத்தபோகிறீர்கள் என்றால், bank பெயரை தந்துவிட்டு, make payment என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment