மீன் உணவில் புரதம், வைட்டமின் டி போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மீன்களில் உயர்தரப் புரதம், அயோடின் மற்றும் பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளது.
மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளது. இது நம்முடைய உடலுக்கும், மூளைக்கும் முக்கிய தேவையான ஊட்டச்சத்து.
மேலும் நம்முடைய உடலில் ஏற்படக்கூடிய பல விதமான நோய்களை குணமாக்கும் தன்மையும் கொண்டது மீன் உணவுகள். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நம்முடைய உடல் வளர்ச்சிக்கு முக்கிய தேவை. உடலுக்குத் தேவையான ஒமேகா-3 தேவையை பூர்த்தி செய்ய கொழுப்பு நிறைந்த மீன்களை வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிடுவது நல்லது.
மீன் உணவை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடிய அபாயத்தை குறைக்கலாம். நாம் சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கான முக்கியமான உணவுகளில் ஒன்றாக மீன் உணவு கருதப்படுகிறது. ஆய்வு முடிவுகள் தொடர்ந்து மீன் உணவை சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோயால் இறக்கும் அபாயம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமாக இருப்பதால் கொழுப்பு வகை மீன்கள் இதய ஆரோக்கியத்திற்கு இன்னும் அதிக நன்மைகளை கொடுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
மீன் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு மூளையின் ஆரோக்கியம் அதிகரிக்கும். மூளையின் செயல்பாடு வயதாகும்போது குறைகிறது. வயதானவர்களுக்கு ஞாபக சக்தி குறைவது இயல்பு. ஆனால் அல்சைமர் நோய் போன்ற கடுமையான நரம்பியல் கடத்தல் நோய்கள் மிகப் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் அதிக அளவு மீன் உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு இந்தப் பிரச்சனை மிகவும் குறைவாக வருவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
அதிக அளவு மீன் உணவு சாப்பிட்டு வருபவர்களுக்கு மன அழுத்தப் பிரச்சனைகள் மிக குறைவாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. மனசோர்வு உலக அளவில் மிகப்பெரிய சுகாதார பிரச்சனையாக மாறிவருகிறது. ஆனால் தொடர்ந்து மீன் உணவுகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு இந்த மனசோர்வு அடைவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக இருக்கும். காரணம் மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மன சோர்வை எதிர்த்து போராடும்.
மீன் உணவுகளில் வைட்டமின் டி அதிக அளவு காணப்படுகிறது. வைட்டமின் டி உங்களுடைய உடலில் ஒரு ஸ்டெராய்டு ஹார்மோன் போல செயல்படுகிறது. இது உங்களுடைய ஆற்றலை அதிகரிக்கும்.
மீன் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வர கூடிய குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்சனை குறையும் என ஆய்வு முடிவுகள் சொல்கிறது. உங்களுடைய காற்று பாதைகளில் நாள்பட்ட அழற்சியால் வகைப்படுத்தப்படும் ஒரு பொதுவான நோய் ஆஸ்துமா. இந்த ஆஸ்துமா பிரச்சனை மீன் உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 24 சதவீதம் அளவுக்கு குறைவாக இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
வயதான காலங்களில் ஏற்படக்கூடிய பார்வை குறைபாடு பிரச்சனையை மீன் உணவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் குறைக்க முடியும். பார்வை குறைபாடு, குருட்டுத்தன்மை பிரச்சனை பெரும்பாலும் வயதானவர்களை அதிகம் பாதிக்கிறது. மீன் உணவுகளில் இருக்கக்கூடிய ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இந்த பிரச்சனைகளை சரி செய்யக் கூடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
தூக்கமின்மை பிரச்சனை உலக அளவில் மிகப்பெரிய சுகாதார பிரச்சனையாக மாறிவருகிறது. தொடர்ந்து தூக்கமில்லாமல் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு மீன் உணவை அதிகம் சாப்பிடுவதன் மூலம் அவர்களுடைய தூக்கமின்மை பிரச்சனையை குறைக்க முடியும் என ஆய்வுகள் சொல்கிறது. அதிக அளவு மீன் உணவு சாப்பிட்டு வருபவர்களுக்கு இந்த தூக்கமின்மை பிரச்சனை குறைவாக இருக்கும் என ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. இது மீனில் அதிகம் காணப்படக்கூடிய வைட்டமின்-டி உள்ளடக்கம் காரணமாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் சொல்கிறது.
No comments:
Post a Comment