Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 25, 2023

அரசு பள்ளிகளில் துணைக்குழு பெற்றோரை சேர்க்க உத்தரவு

அரசுப் பள்ளிகளில் நிர்வாக ஒருங்கிணைப்புப் பணிக்கு, பெற்றோரை மட்டுமே கொண்ட குழுக்கள் அமைக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும், பள்ளி மேலாண்மை குழு என்ற பெயரில், பெற்றோர் ஆசிரியர் சங்கம் செயல்படுகிறது.

இந்த குழுக்களில், தலைமை ஆசிரியர், உள்ளாட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர் மற்றும் பெற்றோர் பிரதிநிதிகளாக உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, துணைக்குழு அமைக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் மட்டுமே, துணைக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும்; துணைக் குழு உறுப்பினர்கள் மேலாண்மை குழுவின் உறுப்பினராக இருக்கக் கூடாது என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மாணவர் சேர்க்கை மற்றும் இடைநிற்றலை தவிர்க்க குழு அமைக்கப்படுகிறது.

தொடர்ந்து, பள்ளியின் உள்கட்டமைப்பு மேம்பாடு, உணவு மற்றும் நலத்திட்ட கண்காணிப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, அரசுப் பள்ளி மற்றும் கல்வி விழிப்புணர்வு பிரசாரம் ஆகியவற்றுக்கு, தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த துணைக் குழுக்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து, பள்ளி வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் பங்கெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment