Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் பயன்பாடு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
போதை பொருள் பயன்பாடு:
தமிழகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மாணவர்கள் நலன் சார்ந்த சில அறிவுறுத்தல்களும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு அருகே போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதில் போதை பொருள் என்று சொல்லக்கூடிய “கூலிப்”விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனையின் போது அவர்களை சோதித்துப் பார்க்க வேண்டும்.
பற்களில் கறைகள் உள்ளதா? என்பதையும் கவனிக்க வேண்டும். அத்துடன் வாரத்தின் முதல் நாள் காவல்துறை ஆய்வாளர், உளவியல் நிபுணர் ஆகியோரை பள்ளிக்கு அழைத்து மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment