Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாகவே சமையல் அறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக கருஞ்சீரகத்தில் எண்ணிலடங்கா பயன்கள் காணப்படுகின்றது.
கருஞ்சீரகத்தில் நியாசின், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12 ஆகியவை அதிகம் உள்ளன.
தக்காளியை தவிர்க்கும் ஆண்களுக்கு இந்த ஆபத்து நிச்சயம் தக்காளியை தவிர்க்கும் ஆண்களுக்கு இந்த ஆபத்து நிச்சயம் அத்துடன் நார்ச்சத்துக்கள், அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து போன்றவையும், சோடியம், கால்சியம், பொட்டாசியம் ஆகிய உடலுக்கு தேவையான தாதுக்களும் நிறைந்து காணப்படுகின்றன.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது இன்றியமையாத ஒன்று. கருஞ்சீரகத்தை பொடியாக்கி காலையில் எழுந்தவுடனும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்னரும் தேனுடன் கலந்து சாப்பிட்டுவர 2 வாரங்களுக்குள் உடல் எடை கணிசமாக குறையும்.
மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றல் போன்றவற்றுக்கு கருஞ்சீரகத்தை பாலில் கலந்து குடிப்பது மிக சிறந்த பலன் கொடுக்கும்.
தினசரி கருஞ்சீரகத்தை பொடியாக்கி பாலிலோ சுடுநீரிலோ கலந்து குடித்துவர இதயம் ஆரோக்கியமாக இருக்கும், இரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன் புற்றுநோய் அபாயம் குறைக்கப்படுகின்றது.
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் வெந்நீரில் கருஞ்சீரக எண்ணெய் கலந்து குடிப்பது மிகவும் நல்லது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
கருஞ்சீரக எண்ணெயை பயன்படுத்தும் போது உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் கிடைக்கும்.
இந்த எண்ணெயில், 17% புரதமும், 26% கார்போஹைட்ரேட்டும் உள்ளன. இதில் 57% தாவர எண்ணெய்கள் இருக்கின்றன. மேலும் கருஞ்சீரகம் சரும அழகை பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
கருஞ்சீரக எண்ணெய், எலுமிச்சை சாற்றுடன் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் 2 முறை செய்துவந்தால் முகம் பொலிவு பெருவதுடன் முகப்பருக்கள் வருவதை தவிர்கக முடியும்.
நீரிழிவு நோயாளிகள் கருஞ்சீரகத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெகுவாக குறையும்.
No comments:
Post a Comment