Join THAMIZHKADAL WhatsApp Groups
பெண்கள் பலரும் நீளமான கூந்தல் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றன. லாங் ஹேர் என்பது தற்போது ஃபேஷனாக மாறிவிட்டது.
நீளமான தலைமுடி கொண்ட நடிகைகளும் தற்போது ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகின்றனர். அந்த வகையில் தலைமுடி நீளமாக, அடர்த்தியாக ,கருப்பாக வளர கறிவேப்பிலை கைக்கொடுகிறது. கறிவேப்பிலை பொடி, கறிவேப்பிலை எண்னெய், கறிவெப்பிலை ஹேர் பேக் என பல வகைகளில் கறிவேப்பிலையை தலைமுடியில் பயன்படுத்தலாம். அதே போல் உணவிலும் கறிவேப்பிலையை அதிகளவில் சேர்த்து கொள்ளலாம்.
அந்த வகையில் இந்த பதிவில் முடி வலர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம் வாருங்கள். கறிவேப்பிலை முற்றிலும் இயற்கை பொருள் என்பதால் இதனால் அலர்ஜி, அழற்சி போன்ற எந்த பிரச்சனையும் ஏற்படாது. தலைமுடிக்கு தாரளமாக கறிவேப்பிலையை பயன்படுத்தலாம்.
கறிவேப்பிலையை கூந்தலில் பயன்படுத்துவது எப்படி?
ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை தண்ணீரில் நன்றாக கழுவவும். இப்போது மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் கறிவேப்பிலையை போட்டு நன்கு மைய அரைக்கவும். இப்போது அதில் 2-3 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து அரைத்து எடுக்கவும். இந்த ஹேர் பேக்கை உந்தலை முதல் முடியின் நுனி வரை அபளை செய்யவும். 1 மணி நேர ஊறிய பின்பு ஹேர் வாஷ் செய்யவும். இது கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் கைக்கொடுக்கும்.
தேங்காய் எண்ணெயில் சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். எண்ணெய் கருப்பாகும் வரை கொதிக்க வைக்கவும். இப்போது எண்ணெய்யை ஆற வைக்கவும். இந்த எண்ணெய்யை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முடியை அலசவும்
முடி பராமரிப்பு குறிப்புகள்உங்கள் தலைமுடியில் எண்ணெய் பசை இருந்தால், வாரத்திற்கு மூன்று முறை ஹேர் வாஷ் செய்யவும்.
எண்னெய் வைக்காமல் முடியை ஹேர் வாஷ் செய்ய கூடாது.
கெமிக்கல் ஷாம்புக்கு பதில் மூலிகை ஷாம்பு பயன்படுத்தவும். இது முடிக்கு தீங்கு விளைவிப்பதில்லை.
தலைமுடியை டவலால் தேய்க்கக்கூடாது. அதற்கு பதிலாக, சில நிமிடங்களுக்கு உங்கள் தலையைச் சுற்றி துண்டை வைக்கவும். இவ்வாறு செய்வதால் ஈரப்பதம் உறிஞ்சப்படும்.
ஈரமான முடியை சீப்பால் வார கூடது. அதே போல் சிக்கு எடுக்க பெரிய பல் சீப்பை பயன்படுத்தவும்.
தலைமுடிக்கு சூடான எண்ணெய் தேய்ப்பது நல்ல பலனை தரும். பெரும்பாலும் மசாஜ் செய்வதற்கு வெதுவெதுப்பான எண்ணெய்யை பயன்படுத்தவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
No comments:
Post a Comment