Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, September 12, 2023

பாதாமை ஊறவைத்து தோலுரித்து தான் சாப்பிடவேண்டும்: ஏன் தெரியுமா?

பாதாம் நட்ஸ் வகையை சார்ந்தது, பாதாமில் அதிகளவு புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின்கள் உள்ளது.

பாதாம் சாப்பிடுவதால் மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள் பிரச்சனைகள் நீங்கும்.

மேலும் கேசப் பிரச்சினைகள், சொரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது.


நட்ஸ் வகைகளில் பாதாமை மட்டும் நாம் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் தோலுரித்து தான் சாப்பிட வேண்டும்.

பாதாம் தோலை நீக்காமல் சாப்பிட்டால் செரிமானிக்க கடினமாக இருக்கும். இதன் பக்கவிளைவாக வயிற்று மந்தம், வயிற்றுப்போக்கு போன்ற கோளாறுகள் உண்டாகலாம்.

அதுமட்டுமன்றி அதில் இருக்கும் ஆன்டி நியூட்ரியண்ட்ஸ் , டானிக் மற்றும் ஃபைடிக் அமிலம் போன்றவை தோலில் இருப்பதால் அவை ஊட்டச்சத்து உறிஞ்சுவதை தடுக்கிறது. இரத்தத்தில் பித்தம் அதிகரிக்கலாம். எனவே அதன் தோலை இரவு முழுவதும் ஊற வைத்து அதன் தோலை நீக்கிவிட்டுதான் சாப்பிட வேண்டும்.


இரவு முழுவதும் ஊறவைத்துள்ள பாதாமை தினமும் 5-6 சாப்பிட்டு வர அன்றைய தினம் ஆற்றல் மிக்கதாகவும், சுறுசுறுப்பாகவும் உணர்வீர்கள்.

பாதாம் புரதச்சத்து, நார்ச்சத்து, விட்டமி ஈ, ஒமேகா 3, ஒமேகா 6 , மெக்னீசியம், கால்சியம் , இரும்பு, பொட்டாசியம் மற்றும் ஸிங்க் போன்ற ஊட்டச் சத்துக்களை நிறைவாக கொண்டுள்ளது. எனவே தினமும் குறைந்தது 5 பாதாம் சாப்பிட்டு வர ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்கலாம்.

அதுமட்டுமன்றி பாதாம் மூளை மற்றும் நரம்புகளுக்கு நல்லது. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. தசைகளுக்கு வலு சேர்க்கிறது. வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News