Join THAMIZHKADAL WhatsApp Groups
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை எந்த மாதிரியான விரதங்களை மேற்கொண்டால் பலன் கிட்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முதல் சனிக்கிழமையின் முக்கியத்துவம் என்ன?
புண்ணியம் நிறைந்ததும், பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் அதுவும் முதல் சனிக்கிழமையில் பெருமாளை தரிசிப்பது அவ்வளவு பலன்களை அள்ளி கொடுக்கும். வாழ்க்கையில் சகல செளபாக்கியங்களையும் பெற நினைப்பவர்கள் இந்த புரட்டாசி முதல் சனிக்கிழமையை தவற விடாதீர்கள். பெருமாள் உங்களுக்கு தேவையான அனைத்தையும் தந்தருள்வார். இந்த மாதம் முழுவதுமே தினமும் பெருமாளை வழிபடுவது உன்னதமானது. பெருமாளுக்காக ஏதேனும் வேண்டுதல்கள் இருந்தால் இந்த மாதத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் தான். இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மறவாமல் கோயில் சென்று பெருமாளுக்கு துளசி மாலை செலுத்தினால் நல்லது.
விரதம் இருக்கும் முறை
புரட்டாசி மாத விரதம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. காலையில் இருந்து விரதத்தை தொடங்குபவர்கள் மாலை பெருமாளை தரிசித்துவிட்டு விரத்தை நிறைவு செய்வார்கள். இந்த மாதத்தில் உணவில் எந்தெந்த பொருட்களை தவிர்த்துவிட்டு சமைத்தால் நல்லது என பார்க்கலாம்.
1. வெங்காயம், பூண்டு, கரம் மசாலா பொருட்கள், இஞ்சி ஆகிவற்றை உணவில் தவிர்ப்பது நல்லது பலனும் கிட்டும்.
2. புரட்டாசி முழுவதும் அசைவம் சாப்பிடமாட்டார்கள் இது பொதுவாக இருக்கும் பழக்கம் தான். இந்த மாதத்தில் வேங்கடவனை தரிசிப்பதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யும் பழக்கமும் எல்லாம் பலனையும் கொடுக்கும்.
3. இந்த நன்னாளில் பெருமாளுக்கு புளியோதரை அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து மனதார வழிபடுங்கள்.
4. அன்னத்தானம் செய்தாலும் புண்ணியம் தரும். கடன் துன்பத்தில் இருந்து காத்தருளும் வேங்கடவன், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கும் மகாலக்ஷ்மிதேவி இருவரையு மனதார வழிபடுங்கள் உங்கள் குறைகள் தீரும்.
5. குறிப்பாக புரட்டாசி முதன் சனிக்கிழமையில் கல்யாணம் ஆகாத பெண்கள் விரதம் இருந்தால் தடைப்பட்ட திருமணம் முதலான காரியங்களை பெருமாளும் தாயாரும் நடத்துவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
முதன் சனிக்கிழமையில் செய்ய வேண்டிய பூஜை
சனிக்கிழமையில் பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் கலந்த மாவிளக்கு ஏற்றி பெருமாளை வழிபடவேண்டும். திருப்பதியில் உள்ள ஏழுமலைகளை குறிக்கும் மாவிளக்கை கட்டாயம் ஏற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் வைப்பது மிகவும் நல்லது. இதன்மூலம் ஜாதகங்களில் இருக்கும் தோஷங்கள் நிவர்த்தியாகும். இத்துடன் பெருமாளுக்கு படையல் போட்டு குத்து விளக்கில் 5 முகம் ஏற்றி வழிபடுவது மிக மிக நல்லது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் கட்டாயம் இவற்றை கடைபிடிங்கள்:
1. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது வழக்கம்.
2. இந்த புரட்டாசி மாதத்தில் பிட்சை எடுத்து பெருமாளுக்கு தளிகை போடுவது வழக்கம். அப்படி பிட்சை எடுக்கும் போதும் போடும் போதும் இருவருமே கவனமாக இருத்தல் நல்லது. பெருமாளின் அருள் இருவருக்குமே கிடைக்கும்.
3. தளியலுக்கு தேவையான சர்க்கரை பொங்கல், எள்ளு பாயசம், புளி சாதம், தயிர் சாதம், தளியல் வடை, கொண்டை கடலை சுண்டலுடன் வாழைக்காய் பொரியல் ஆகிய நைவேத்யங்கள் தயார் செய்ய வேண்டும்.
4. ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் துளசியை கலந்து படையல் முன்பு வைக்கவும். தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, பாக்கு, சூடம் விபூதி குங்குமம் இவைகளை தட்டில் வைத்து தூப தீப ஆராதனை செய்து கோவிந்தா என்ற நாமத்துடன் புரட்டாசி சனிக்கிழமை அன்று வெங்கடேச பெருமாளை வழிபடுவது சிறப்பு.
No comments:
Post a Comment