Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, September 5, 2023

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் ரதயாத்திரை நாளை தொடக்கம்.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அகில இந்திய ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இணைந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்க கோரியும், கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை ரதயாத்திரை நடத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்த ரத யாத்திரையின் தொடக்க விழா நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடக்கிறது. இந்த ரத யாத்திரையின் தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்குகிறார். மாநில பொதுச்செயலாளர் ரங்கராஜன் வரவேற்று பேசுகிறார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கொடியசைத்து ரதயாத்திரையை தொடங்கி வைக்கிறார். 

கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த ரத யாத்திரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, குஜராத், ஜார்க்கண்ட் உள்பட பல்வேறு மாநிலங்களை கடந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி டெல்லியை சென்றடைகிறது. இந்த ரதயாத்திரை மொத்தம் உள்ள 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 30 நாட்களில் கடந்து செல்கிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News