Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 13, 2023

ஊறவைத்த கருப்பு கொண்டக்கடலை சாப்பிடுங்க: நன்மைகள் ஏராளம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கருப்புக் கொண்டக்கடலையில் சுவை மட்டுமல்ல, இரும்புச் சத்து உட்பட உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

சைவ உணவு சாப்பிடுபவர்களின் புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்ய தினமும் ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையை எடுத்துக் கொள்ளலாம்.

இதில் நிறைந்துள்ள இரும்பு சத்து உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது.

காலையில் எழுந்தவுடன் ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையை சாப்பிட்டால் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்படலாம். மேலும் உடல் பலவீனம் நீங்கி நல்ல உடல் வலிமையை பெறலாம்.


ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளையும் தடுக்கிறது.

ஊறவைத்த கொண்டைக்கடலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், இரத்த கட்டிகள் உருவாவதை தடுக்கவும் உதவுகிறது.

ஊறவைத்த கருப்பு கொண்டக்கடலையில் உள்ள நிறைந்துள்ள நார்ச்சத்தும் நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருப்பதன் மூலம் அதிகப்படியான உணவு உட்கொள்ளலை தடுக்கிறது. அதனால் உடல் எடையை பராமரிக்க முடியும்.

ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து பித்த அமிலங்களை பிணைக்கவும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றன. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின்களும், தாதுக்களும் கருப்பு கொண்டைக்கடலையில் அதிக அளவில் உள்ளன. தினமும் காலையில் ஊறவைத்த கருப்பு கொண்டக்கடலையை சாப்பிட்டு வர உடலின் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

மேலும் கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை பெருமளவு குறைக்கின்றன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News