Join THAMIZHKADAL WhatsApp Groups
உலகிலேயே மிக அழகான கையெழுத்து இதுதான்... நேபாளத்தையே எழுதி தரலாம்... மிரள வைத்த இளம் பெண்.
காத்மாண்டு: நேபாளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கையெழுத்து உலகிலேயே மிக அழகான கையெழுத்து என்ற பெருமையை பெற்றுள்ளது.
அந்த கையெழுத்தை பார்த்தால் இப்படி ஒரு கையெழுத்தை நம்மால் எழுத முடியவில்லையே என்று நிச்சயம் கம்ப்யூட்டரே வெட்கப்படும்.
அழகான கையெழுத்து உள்ளவர்கள் படிப்பில் பொதுவாக சிறந்து விளங்குவார்கள்.கையெழுத்து போலவே தலையெழுத்தும் சிறப்பாக இருக்கும். பள்ளி தேர்வுகளில் சாதாரண கையெழுத்து உள்ளவர்களை விட அழகான கையெழுத்து உள்ளவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.
அவர்களின் எழுத்து நடையும் படிப்பும் சிறப்பாக இருந்தால் அவர்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய உச்சத்தை அடைவார்கள்.
மிகப்பெரிய பல ஜாம்பவான்களின் கையெழுத்து பார்க்க அற்புதமாக இருக்கும்.சிலர் இதில் விதிவிலக்காகவும் இருக்கலாம்.
அழகான கையெழுத்து உருவாக சிறு வயதில் இருந்தே அதற்கு பயிற்சி பெற வேண்டும். சிறு வயதில் இருந்தே சரியான எழுத்து பயிற்சி பெற்றவர்கள் நல்ல கையெழுத்தை பெறுவார்கள்.
நேபாளத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் கையெழுத்து உலகிலேய மிக நேர்த்தியான அழகான கையெழுத்து என்று புகழை பெற்றுள்ளது. தொடர் பயிற்சியால் நேபாள மாணவி இந்த நிலையை எட்டி உள்ளார்.
நேபாளத்தைச் சேர்ந்த 16 வயதாகும், பிரகிருதி மல்லா என்ற மாணவியின் கையெழுத்து தான் உலகின் அழகான கையெழுத்து என்ற புகழை பெற்றுள்ளது.
சிறுமி பிரகிருதி மல்லா, தனது 14 வயதில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, அவரது கையெழுத்தில் உருவான கடிதத்தை பார்த்து பலரும் வியந்து போனார்கள்.
அப்போதே அந்த கையெழுத்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. அந்த நோட்டில் இருந்த கையெழுத்தின் அழகைக் கண்டு நேபாள மக்கள் வியந்து பாராட்டி, பாராட்டு மழை பொழிந்தார்கள்.
இந்நிலையில் நேபாள மாணவி பிரகிருதி மல்லா, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 51வது ஆண்டு ஒற்றுமை தினத்தை ( UAE 51 Spirit of the Union) முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வாழ்த்துக் கடிதம் எழுதினார்.
விழாவின் போது அவர் தனிப்பட்ட முறையில் கடிதத்தை தூதரகத்திற்கு வழங்கினார்.
No comments:
Post a Comment