Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 1, 2023

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு நழுவ விடாதீர்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இணைய வழி கூட்டத்தில் மதிப்புமிகு சிறப்பு பணி அலுவலர்(OSD) இல்லம் தேடி கல்வித் திட்ட சிறப்பு பணி அலுவலர் ஐயா அவர்கள் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்.

📌 TNeGA மூலம் இ-சேவை மையம் தொடங்க இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் பணியினை சிறப்பாக பணியாற்றியதற்காக தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

📌 தற்போது இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் *எந்தவித கட்டணமும் இன்றி* இ- சேவை மையத்தை தொடங்கலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. (ஏற்கனவே இ சேவை மையம் தொடங்க கிராமப்புறங்களில் ₹3000, நகர்ப்புறங்களில் ₹6000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது)

📌இ-சேவை மையம் தொடங்க விரும்பும் தன்னார்வலர்கள் நம் இல்லம் தேடி கல்வி செயலிலேயே(App) விருப்பத்தை தெரிவிப்பதற்கான வசதி உள்ளது.

📌 அதன் பின்னர் இ-சேவை மையம் தொடங்க தேவையான வழிகாட்டுதல்கள்,பயிற்சிகள் ஆகியவற்றை TNeGA மூலம் பெற்று வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

📌 இ-சேவை மையம் மூலம் 200 க்கும் அதிகமான சேவைகளை பொது மக்களுக்கு வழங்குவதன் மூலம் ஒரு நிரந்தர வருமான வாய்ப்பாக தன்னார்வலர்கள் அமைத்துக் கொள்ள முடியும்.

📌 முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மகளிர்க்கான உரிமை தொகை இ-சேவை மையம் மூலமாக வழங்கப்பட இருப்பதால் தன்னார்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அவர்கள் இருப்பிடத்திலேயே இ-சேவை மையங்களை தொடங்கி பயன் பெறலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News