Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 27, 2023

சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் காலையில் உண்டு வந்தால்...

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நமது நாட்டின் வீட்டு தோட்டங்களிலும், ஈரமான நிலங்களிலும் தானாகவே சுண்டை செடி வளர்கிறது. சுண்டை காய்கள் பழங்காலம் முதலே நமது நாட்டு மருத்துவத்தில் பயன்படுதப்பட்டு வருகிறது.

அந்த சுண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சுண்டக்காய் பயன்கள்

வயிற்று பூச்சிகள்

நமது வயிறு என்பது நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து நமக்கு சத்து அளிக்க உதவும் ஒரு உறுப்பாகும். நுண்ணுயிரிகள் நிறைந்த உணவுகளை சிலர் அதிலும் குறிப்பாக குழந்தைகள் சாப்பிடுவதால் அவர்களின் வயிற்றில் பூச்சி தொல்லை ஏற்படுகிறது. சுண்டக்காய் பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகளை அழித்து குடல், வயிறு சுத்தமாகும்.

பசியுணர்வு

ஒரு நாளில் மொன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பாக வயிற்றில் பசி உணர்வு ஏற்படுவதே உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சிறந்த அறிகுறியாகும். சிலருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் பசி உணர்வு குறைந்து விடும். சுண்டைக்காய்களை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு பசி உணர்வு அதிகமாகி உடல் ஆரோக்கியம் மேம்படுத்தும்.

வயிற்று போக்கு

பலருக்கும் ஏதேனும் ஒரு காரணத்தால் சமயங்களில் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் இவற்றை சம எடையாக எடுத்து, நன்கு காயவைத்து, வறுத்து, இடித்துத் தூள் செய்துக் கொள்ள வேண்டும். இதனை, 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோருடன் கலந்து காலை, மாலை வேளைகளில், இரண்டு நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு, சீதபேதி நிற்கும்.

அஜீரணம்

கண்ட கண்ட நேரங்களில் அதிகம் உண்பது, எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை இரவில் அதிகம் உண்பது போன்ற காரணங்களால் சிலருக்கு அஜீரணம் ஏற்படுகிறது. சுண்டைக்காய் வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை விரைவில் தீரும்.

மூலம்

கடுமையான மலச்சிக்கலே மூலம் நோய்க்கு பிரதான காரணமாக இருக்கிறது. அத்துடன் அதீத உடல் உஷ்ணம் மற்றும் கார உணவுகள் அதிகம் சாப்பிடுவதாலும் மூலம் உருவாகிறது. பச்சையான இளம் சுண்டைக்காய்களை மிதமான காரம் பயன்படுத்தி குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் மூலம் பிரச்சனை விரைவில் நீங்கும்.

சளித்தொல்லை

சுண்டக்காய் சற்று உஷ்ண தன்மை கொண்ட ஒரு காய் வகையாகும். ஜலதோஷம் அல்லது சளி பாதிப்புகள் ஏற்பட்டவர்கள் பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சுண்டைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.

ரத்தம் சுத்திகரிப்பு

தினமும் நாம் சாப்பிடுவது, குடிப்பது,அருந்துவது என அனைத்து பொருள்களிலும் மாசு நிறைந்துள்ளன. இந்த மாசு அல்லது நச்சுகள் அனைத்தும் நமது ரத்தத்தில் சேர்ந்து கொண்டு எதிர்காலங்களில் நமது உடல்நலத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சுண்டக்காய் குழம்பு, வதக்கல் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் பெறும்.

எலும்புகள்

நமது உடலில் எலும்புகள் பலமாக இருக்க வேண்டியது அவசியம். அனைவருக்கும் வயதாகும் காலத்தில் எலும்புகளின் உறுதி தன்மை குறைந்து கொண்டே வரும். சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. சுண்டைக்காய்க் குழம்பு வைத்து சாப்பிடுவதால் நமது எலும்புகள் உறுதியடையும்.

சுவை திறன்

உடல்நலம் குன்றியிருக்கும் காலத்தில் பலருக்கும் நாக்கில் உணவின் சுவை அறியும் திறன் சற்று குறைந்து விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்கள் தினமும் சிறிதளவு சுண்டக்காய் பக்குவப்படுத்தி சாப்பிடுவதால் நாக்கில் சுவை அறியும் திறன் மீண்டும் அதிகரிக்கும். உணவை செரிக்க எச்சிலை நன்கு சுரக்க செய்யும்.

குரல்வளம்

நாம் பிறருடன் தொடர்பு கொள்ள நமக்கு உதவுவது நமது குரல் தான். ஜலதோஷம் பீடித்த காலத்தில் சிலருக்கு குரல் கட்டிக்கொண்டு சரி வர பேச முடியாமல் போகிறது. சிலருக்கு வேறு பல காரணங்களால் குரல் வளம் குறைகிறது. சுண்டைக்காய்களை அடிக்கடி பக்குவப்படுத்தி சாப்பிட்டு வந்தால் குரல் வளம் சிறக்கும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இரண்டு வகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகமாக காணப்படுவது காட்டுச்சுண்டை என அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் வற்றல் செய்ய பயன்படுகிறது.

இந்த சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து தினமும் ஐந்து கிராம் பொடியை வெறும் வயிற்றில் காலையில் உண்டு வந்தால் உடல் பருமன் மளமளவென குறையும். சுண்டைக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை ஏற்படாது.

சுண்டைக்காய் வற்றல், சீரகம், சோம்பு ஆகிய மூன்றையும் ஒரே அளவு எடுத்து அரைத்து தினமும் காலை, மாலை என இரு வேளை தலா இரண்டு கிராம் சாப்பிட்டால் தைராய்டு கோளாறுகள் குணமாகும். சுண்டைக்காய் வற்றலுடன் மாதுளை ஒடு சேர்த்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.

சுண்டைக்காய் வற்றல் மற்றும் ஒமம் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் நீங்கும்.

சுண்டை வற்றல் உடன் கறிவேப்பிலை, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு தேக்கரண்டி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் பசியின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியன குணமாகும்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top