Join THAMIZHKADAL WhatsApp Groups
நாமக்கல் மாவட்டம், பழங்குடியினர் உண்டி உறைவிட தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், தற்காலிக அடிப்படையில், தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.இந்த பணிகளுக்கு, தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்கள் காலிப்பணியிடம் : இடைநிலை ஆசிரியர் - 2, பட்டதாரி ஆசிரியர் - 2 (தமிழ் - 1, அறிவியல் - 1) முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் -1 (உயிரியல்). விண்ணப்பதார்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள், நேரடியாகவோ தபால் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்று நகல்களுடன், மாவட்ட திட்ட அலுவலர், பழங்குடியினர் நலம், கொல்லிமலை, நாமக்கல் மாவட்டம் - 637 411, என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். விண்ணப்பங்கள் வருகிற 8.9.2023 அன்று மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆசிரியர் பணிக்கான மாத தொகுப்பூதியம், இடைநிலை ஆசிரியர் ரூ.12,000, பட்டதாரி ஆசிரியர் ரூ.15,000, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் ரூ.18,000. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி, தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்படும். கல்வித் தகுதி பெற்ற பழங்குடியினர் இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பழங்குடியினர் இல்லாத பட்சத்தில் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதியிலுள்ள கல்வித் தகுதி பெற்ற, இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வாலர்களாக பணிபுரிந்து வருபவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் இருப்பின், ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில், இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் காலிப்பணியிடங்களாக உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை, நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பிடும் வரை, தகுதி பெற்ற பணிநாடுநர்களைக் கொண்டு, சம்மபந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு காலிப்பணியிடம் நிரப்பப்படும் நாள் முதல், பள்ளி மேலாண்மைக்குழு மூலம் பணியமர்த்தப்பட்ட தற்காலிக தொகுப்பூதிய பணியாளர்கள், பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
காலிப்பணியிட விபரங்களை நாமக்கல் மாவட்ட பழங்குடியினர் திட்ட அலுவலக அறிவிப்பு பலகையினைப் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். தொகுப்பூதிய பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. மேலும் தகவல்களுக்கு செல்போன் நம்பர் 94438 36370 மூலம் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment