Join THAMIZHKADAL WhatsApp Groups
நமது வயிற்றில் குடல் பகுதியில் உருவாகும் புழுக்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை. ஆனால் இவற்றை ஆரோக்கியமான இயற்கை உணவுகளின் மூலம் எளிமையாக நீக்க முடியும்.
எனவே நமது உடலில் உருவாகும் குடல் புழுக்களை எவ்வாறு எளிதாக நாம் உண்ணும் உணவுகளின் மூலம் நீக்கலாம் என்பது குறித்து எந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
வெதுவெதுப்பான பாலுடன் ஆமணக்கு எண்ணெய் 2 கரண்டி கலந்து குடிப்பதன் மூலம் குடல் புழுக்கள் கழிவுகள் வழியாக வெளியேறும்.
தினமும் ஒரு பல் பூண்டை மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் குடல் புழுக்கள் இறந்துவிடும். மேலும் எலுமிச்சை விதைகளை பொடியாக்கி நீருடன் கலந்து குடிப்பதால் குடல் புழுக்கள் வெளியேறிவிடும்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கேரட்டை மென்று சாப்பிட்டு வர உடல் புழுக்கள் நீங்கும். மேலும் ஒரு கப் புதினா ஜூஸுடன், எலுமிச்சை சாறு மற்றும் கருப்பு உப்பு கலந்து சாப்பிட்டால் குடல் புழுக்கள் நீங்கும்.
அதேபோல் கற்பூரவள்ளி எண்ணெயை, எலுமிச்சை சார்பில் கலந்து குடித்தால் குடற்புழுக்கள் நீங்கும். திரவம் 2 கிராம்பை வென்று தின்பதால் குடற்புழுக்கள் நீங்கிவிடும்.
No comments:
Post a Comment