Monday, September 18, 2023

கருஞ்சீரகத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தெரியுமா?

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சரியான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுங்கள். சரியான உணவை, சரியான அளவுகளில், சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

இதற்கு அதிக செலவு செய்து, கடினமாக உழைக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய தினசரி வழக்கத்தில், மருத்துவ குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தை சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய் உட்பட பல உடல் நல பிரச்சனைகளை தடுக்கலாம்.

கருஞ்சீரகம் சாப்பிடும் முறை : கருஞ்சீரகத்தை பொடித்து வைத்து கொள்ளவும். காலையில் எழுந்தவுடன் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகத்தை ஒரு கிளாஸ் வெந்நீருடன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். நீங்கள் விரும்பினால் இனிப்பு சுவைக்காக இதில் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு கருஞ்சீரகத்தை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதால் பின்வரும் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

எடை இழப்புக்கு உதவும்

கருஞ்சீரகத்தில் உள்ள நார்ச்சத்து உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும் உடல் எடையை குறைக்க கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளும்படி பல நிபுணர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.


இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

கருஞ்சீரகத்தில் உள்ள பண்புகள் உடலின் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன.

சர்க்கரை நோயை தடுக்கலாம்

இன்றைய காலகட்டத்தில் பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் சர்க்கரை நோயை தடுக்கவும் மற்றும் சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்கவும் கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளலாம்.

நினைவாற்றலை மேம்படுத்தும்

கருஞ்சீரகத்தில் உள்ள பண்புகள் நினைவாற்றலை மேம்படுத்த சிறந்தவை. இது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக, விழிப்புடன் செயல்பட உதவுகிறது.

நோய் தொற்றுகளை தடுக்கலாம்

அடிக்கடி ஏற்படும் சளி, இருமல் போன்ற பொதுவான சில நோய் தொற்றுகளை தடுக்க வெறும் வயிற்றில் கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளலாம். கருஞ்சீரகம் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மிகவும் நல்லது.

மூட்டு வலியை குணப்படுத்தும்

மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் கருஞ்சீரகத்தை தங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த அற்புத விதையானது கழுத்து, முதுகு மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.


சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்

சிறுநீரக கற்கள் மற்றும் அதனால் ஏற்படும் வலியை போக்க கருஞ்சீரக விதைகளை தண்ணீருடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். கருஞ்சீரகம் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

உடனடி ஆற்றல் தரும்

கருஞ்சீரகத்தை தண்ணீர் மற்றும் தேனுடன் சேர்த்து குடிப்பதால் உடனடி ஆற்றல் கிடைக்கும். இதை குடிப்பதால் சோர்வு அல்லது சோம்பல் உணர்வு ஏற்படாது.

இதைத் தவிர கருஞ்சீரகத்தை தலைமுடிக்கும் பயன்படுத்தலாம் இது நல்ல அடர்த்தியான கருமையான கூந்தலை பெற உதவும்.

உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தால் கருஞ்சீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News