Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 16, 2023

அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில்... இட ஒதுக்கீடு வாரியாக பிரித்து நிரப்ப அரசு முடிவு.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத உள் இட ஒதுக்கீட்டினை இட ஒதுக்கீடு வாரியாக பிரித்து நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு முதற்கட்ட கவுன்சிலிங் நடத்த சென்டாக் தயாராகி வருகின்றது. விண்ணப்பித்த மாணவர்களின் வரைவு தரவரிசை பட்டியல் வெளியிட்டு, ஆட்சேபனைகள் வரவேற்றுள்ளது.

ஓரிரு நாளில் முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கை ஆணை அளிக்க பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தாண்டு அரசு மருத்துவ கல்லுாரியில் 131 இடங்களும், மூன்று தனியார் மருத்துவ கல்லுாரி களில் 239 இடங்கள் என மொத்தம் 370 சீட்டு கள் இந்தாண்டு அரசு ஒதுக்கீடாக நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட் டுள்ளது.

இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு முதல் முறையாக அமல்படுத்துவதால் 37 சீட்டுகள் ஒதுக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 13 உள் ஒதுக்கீடு இடங்கள் முன்பு பொத்தாம் பொதுவாக நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனவே மதிப்பெண் அடிப்படையில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தும் முறையினை அரசு உருவாக்கியுள்ளது.

அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டினையும் பொது -40 சதவீதம், இ.டபுள்யூ.எஸ்.,-10; ஓ.பி.சி.,-11; எம்.பி.சி.,-18; எஸ்.சி., -16; மீனவர்-2; முஸ்லீம் -2; எஸ்.டி,-0.5; பி.டி.,-0.5 சதவீதம் என்ற வழக்கமான இட ஒதுக்கீடு வாரியாக பிரித்து நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி அரசு மருத்துவ கல்லுாரியில் பிராந்திய ரீதியாக பார்க்கும்போது அரசு மருத்துவ கல்லுாரியில் புதுச்சேரி-9; காரைக்கால்-2; ஏனாம்-1; மாகி-1 சீட்டுகள் கிடைக்கும். நான்கு பிராந்தியங்களிலும் இட ஒதுக்கீடாக பொது-6; இ.டபுள்யூ.எஸ்.,-1; ஓ.பி.சி.,-1; எம்.பி.சி.,-2; எஸ்.சி.,-2; முஸ்லீம்-1 சீட்டுகள் கிடைக்கும். இந்தாண்டு முஸ்லீம் பிரிவினருக்கு 1 சீட்டு ஒதுக்கியுள்ள நிலையில், அடுத்தாண்டு மீனவர் பிரிவினருக்கு சுழற்சி முறையில் சீட் வழங்கப்படும்.

தனியார் மருத்துவ கல்லுாரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டு 24 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. கல்லுாரி ரீதியாக பிம்ஸ்-6; மணக்குள விநாயகர்-9; வெங்கடேஸ்வரா-9 சீட்டுகள் கிடைக்கும்.

இந்த 24 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் பொது-12; ஓ.பி.சி.,3; எம்.பி.சி.,-4; எஸ்.சி.,-4; மீனவர்-1 என்ற அடிப் படையில் நிரப்பப்பட உள்ளது. இந்தாண்டு மீனவருக்கு ஒதுக்கப்படும் ஒரு சீட், அடுத்தாண்டு முஸ்லீம் பிரிவினருக்கு சுழற்சி முறையில் ஒதுக்கப்படும்.

பிற உள் ஒதுக்கீடு

இதேபோல் பிற உள் இட ஒதுக்கீட்டு இடங் களில் விடுதலை போராட்ட வீரர்களுக்கு

4 சதவீதமும், மாற்றுதிற னாளிகளுக்கு 5 சதவீதம், முன்னாள் ராணுவ வீரர்-1 சதவீதம், விளையாட்டு வீரர்களுக்கு 1 சதவீதம் என தற்போது இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.

இதிலும் பொது, ஓ.பி.சி., எம்.பி.சி., உள்ளிட்ட இட ஒதுக்கீட்டு முறை தற்போது அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் பல் மருத்துவம், ஆயுர்வேதம் படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், அதிலும் இட ஒதுக்கீடு அளிக்க சுகாதார துறை ஒப்புதல் அளித்துள்ளதால், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News