Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 11, 2023

வட்டார கல்வி அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

2019-20 மற்றும் 2021-22-ம் ஆண்டில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி வெளியிட்டது. மொத்தம் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 42 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களுக்கான ஹால்டிக்கெட் கடந்த மாதம் (ஆகஸ்டு) 25-ந் தேதி வெளியிடப்பட்டது. இவர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 131 மையங்களில் தேர்வு நடந்தது.

எழுத்து தேர்வு

காலையில் தமிழ் தகுதித்தாள் தேர்வு 30 வினாக்கள் கொண்ட வினாத்தாளுடன் 50 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 40 சதவீதம் தகுதி மதிப்பெண்ணை தேர்வர்கள் எடுக்க வேண்டும். அதாவது, 20 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, பிற்பகலில் நடத்தப்படும் தேர்வின் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

அதன்படி, பிற்பகலில் பொது பாடத்துக்கான தேர்வு 150 கொள்குறி வகை கொண்ட வினாக்களுடன் 3 மணி நேரம் நடந்தது. இதில் பொதுத்தாளில், அதாவது, தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு, புவியியல் என பட்டப்படிப்பு தரத்தில் 110 வினாக்களும், பொது அறிவு பிரிவில் 10 வினாக்களும், கல்வி முறை சார்ந்த 30 வினாக்களும் இடம்பெற்று இருந்தன.

ஒரு இடத்துக்கு 1,070 பேர் போட்டி

150 மதிப்பெண்ணில் தகுதி மதிப்பெண்ணாக எஸ்.டி. பிரிவினர் 60-ம், எஸ்.சி. பிரிவினருக்கு 67.5-ம், இதர பிரிவினர்களுக்கு 75 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும்.

42 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இந்த தேர்வை சுமார் 35 ஆயிரத்து 400 பேர் எழுதியதாக சொல்லப்படுகிறது. இதன்படி பார்க்கையில் ஒரு இடத்துக்கு கிட்டதட்ட 1,070 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த பணியிடங்களுக்கான தேர்வு முடிவை விரைந்து வெளியிடுவதற்கு ஏதுவாக ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News