உனக்கு பித்தம் தலைக்கு ஏறிடுச்சு...என நகைச்சுவையாக பலரிடம் கூறுவதுண்டு. பித்தம் என்ற வார்த்தையை நம்மில் ஒருமுறையாவது பயன்படுத்தாதவர்களே இல்லை.
வாய்மொழி சொல்லான இந்த பித்தம் தான் நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் நம்பி தான் ஆக வேண்டும். கல்லீரலில் சுரக்கின்ற மஞ்சள் நிற நீரைத் தான் மருத்துவர்கள் பித்த நீர் என்று அழைக்கின்றனர். உடலில் செரிமானத்திற்கு இன்றியமையாத பணியை இந்த பித்த நீர் செய்கிறது.
இதன் சுரப்பு சீராக இருக்கும் போது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். ஆனால் அதன் அளவு கூடும் போது, உள்ளங்கால்களில் இருந்து உச்சந்தலை வரை வரும் பிரச்னைகளுக்கு தொடக்க புள்ளியாக மாறுகிறது. பித்த நீர் அதிகரிப்பால், தலைவலி, கண் எரிச்சல், தொண்டை வலி, அசிடிட்டி, வயிற்று புண், சிறுநீர் பாதை தொற்று, வெள்ளைப்படுதல், பாதவெடிப்பு, படப்படப்பு, இதய பிரச்னைகள் ஆகியவற்றை தோற்றுவிக்கும்.
காரணம்உடல்சூட்டை அதிகரிக்கும் உணவுகள்(ஜங்க் மற்றும் துரித உணவுகள்), போதை பொருட்களின் பயன்பாடு, தூக்கமின்மை, காபி, டீ அதிகம் பருகுவது , எண்ண ஓட்டங்கள் அதிகரிப்பு உள்ளிட்டவை பித்த நீர் சுரப்பு அதிகரிக்க காரணங்களாக அமைகிறது. தீர்வுபித்த நீர் சுரப்பை கட்டுப்படுத்த இஞ்சி, சீரகம் சேர்ந்த கலவையை சூரணமாக எடுத்துக் கொள்ளும் போது கட்டுப்படுத்தலாம்.
சூரணம் செய்ய தேவையான பொருட்கள்இஞ்சி - 50 கிராம் சீரகம் - 25 கிராம் பனங்கற்கண்டு -50கிராம் நெய் - சிறதளவு செய்முறைஇஞ்சியை நன்றாக சுத்தம் செய்து தோல் நீக்கி, சிறிதாக நறுக்கி நெய் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடானதும், அதில் சீரகத்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து, பொடியாக்கி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். சாப்பிடும் முறைகாலை மற்றும் இரவு வேளைகளில் உணவுக்கு முன்பு ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் சூரணத்தை கலந்து சாப்பிட்டால் பித்த நீர் சுரப்பு சீராகும். இதுதவிர வெள்ளைப்பூசணிக்காய், உலர்ந்த திராட்சை உள்ளிட்டவற்றையும் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் பித்த நீர் சுரப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment