முக்கிய செய்திகள்

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 25, 2023

பெண்களே உங்கள் முகத்தில் அதிகமாக முடி வளர்கிறதா? கவலை வேண்டாம். இதோ டிப்ஸ்!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பெண்களே உங்கள் முகத்தில் அதிகமாக முடி வளர்கிறதா? கவலை வேண்டாம்… இதோ டிப்ஸ்!!

ஆண்களுக்கு முகத்தில் தாடி, மீசை வளர்வது இயற்கை.

ஆனால், சில பெண்களுக்கு முகத்தில் மீசை, தாடி லேசாகவோ, அடர்த்தியாகவோ வளரும். அதனால், பெண்கள் இதை அகற்ற அழகு நிலையம் சென்று வாக்சிங் செய்து கொள்வார்கள். சிலர் வீட்டிலேயே ஷேவிங் செய்து கொள்வார்கள்.

பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற பிரச்சினையாலும், ஹார்மோன் சமநிலையின்மையே இதற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால்தான், முகத்தில் பெண்களுக்கு அதிகப்படியான முடி வளர்ச்சி ஏற்படுகிறது. சில பெண்களுக்கு மருந்துகள் உட்கொள்வதால் கூட இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.

சரி வாங்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இயற்கையாகவே எப்படி பெண்களுக்கு முகத்தில் வளரும் முடியை எப்படி அகற்றலாம் என்று பார்ப்போம் -

1. ஒரு சின்ன பாத்திரத்தில் 2 ஸ்பூன் சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அதை அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். கெட்டியான இந்த கலவையை சூடு ஆறினதும் முடி இருக்கும் பகுதியில் தடவி 20 முதல் 25 நிமிடங்கள் வரை அப்படியே விட வேண்டும். பின்னர், முகத்தை தண்ணீரால் வட்டமாக தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் முடிகள் கொஞ்சம் கொஞ்சமாக உதிரும்.

2. மேலும், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை முடி இருக்கும் பகுதியில் தடவி, சுமார் 3 நிமிடங்கள் தடவ வேண்டும். பின்னர், வளர்ச்சியின் எதிர் திசையில் முடியை வெளியே இழுத்தால் முடி உதிரும்.

3. ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு ஸ்பூன் சர்க்கரை, அரை ஸ்பூன் அரிசி மாவு போட்டு கெட்டியான பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். இந்த கலவையை முக முடி உள்ள பகுதிகளில் தடவி, சுமார் 30 நிமிடங்கள் வரை உலர வைக்க வேண்டும். பின்னர், இந்த கலவையை எதிர் திசையில் மாஸ்க்கை மெதுவாக உரித்து முகத்தை கழுவினால் முடி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து விடும்.

4. பப்பாளியில் உள்ள பப்பெய்ன் முகத்தில் உள்ள மயிர்க்கால்களை உடைத்து முடி வளர்ச்சியைத் தடுக்க உதவி செய்யும். ஒரு பாத்திரத்தில் பப்பாளியை போட்டு நன்றாக கூழாக்க வேண்டும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து பின்னர் தண்ணீரால் கழுவினால் இயற்கையாக முக முடி உதிர்ந்து விடும்.

இயற்கையான முறைகளைப் பயன்படுத்தி முகத்தில் உள்ள முடியை அகற்ற முயற்சி செய்தால் நன்மை கிடைக்கும்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top