Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஏப்.28-ம் தேதி வெளியிட்டது.
அதில், பிளஸ் 1 வகுப்புக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும்,
பிளஸ் 2 வகுப்புக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும்.
6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு செப்.19-ல் தொடங்கி 27-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதில் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் மதியம் 2.30 மணி வரையும், 9, 10-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும்.
6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான உடற்கல்வி தேர்வு செப்.22-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
செப்.28 முதல் அக்.2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும்.
6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கு…
19ம் தேதி மொழிப்பாடம்,
20ம் தேதி விருப்ப மொழிப்பாடம்,
21ம் தேதி ஆங்கிலம்,
22ம் தேதி உடற்கல்வி,
25ம் தேதி கணக்கு,
26ம் தேதி அறிவியல்,
27ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும்
பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள்
19ம் தேதி மொழிப்பாடம்,
20ம் தேதி ஆங்கிலம்,
22ம் தேதி கணக்கு,
25ம் தேதி அறிவியல்,
26ம் தேதி விருப்ப மொழிப்பாடம்,
27ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும்
No comments:
Post a Comment