Join THAMIZHKADAL WhatsApp Groups
5 ஆண்டு வைப்புதொகை திட்டத்திற்கான வட்டி விகிதத்தை அரசு 6.5%ல் இருந்து 6.7% ஆக உயர்த்தியுள்ளது.
வட்டி விகிதம் உயர்வு!
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தொடர் வைப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஐந்தாண்டு தொடர் வைப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மட்டும் அரசு உயர்த்திருக்கிறது. அதாவது, ஐந்தாண்டு தொடர் வைப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வட்டி உயர்வு டிசம்பர் மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் எனவும் நிதி அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், சேமிப்பு வைப்புத் தொகை, தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்ட எந்த தபால் அலுவலக சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதமும் உயர்த்தப்படாமல் அதே வட்டி விகிதத்தின் கீழ் தொடர அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, சேமிப்பு டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் 4% ஆகவும், ஓராண்டு கால வைப்பு வட்டி விகிதம் 6.9% ஆகவும், இரண்டு ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு வைப்புகளுக்கான வட்டி விகிதம் 7% ஆகவும், 5 ஆண்டுகால வைப்பு தொகை 7.5% ஆகவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடையே, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் கீழ் 8.2% வட்டி விகிதமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 ஆண்டுக்கான தொடர் வைப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment