Join THAMIZHKADAL WhatsApp Groups
டாம்கோ நிறுவனத்தின் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின டாம்கோ நிறுவனத்தின் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ. 98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகா்ப்புறத்தில் ரூ.1,20,000-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகளுக்கு 3 சதவீத வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்பு படிக்க 3 சதவீத வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ரூ.
6 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 30 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் (அறை எண்.16) பெற்று, பூா்த்தி செய்து ஜாதிச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தாா்.
No comments:
Post a Comment