Join THAMIZHKADAL WhatsApp Groups
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பெண்கள் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து விரைவில் அனைத்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 10ல் ஜாதவ்பூர் பல்கலையில் ராகிங் காரணமாக மாணவன் ஒருவர் உயிரிழந்தார். மேலும், கொல்கத்தாவின் தெற்கு புறநகரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். சமீபத்தில் நடைபெற்ற இந்த சம்பவங்களையடுத்து கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
அரசு பெண்கள் பள்ளியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான செலவை மாநில அரசு ஏற்கும். அதேசமயம் தனியார்ப் பள்ளிகளை நிர்வகிக்கும் அதன் பொறுப்பாளர்கள் தான் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மட்டுமல்லாது அனைத்து பெண்கள் கல்லூரிகளிலும் சிசிடிவி கட்டாயமாக்கப்படும் என மாநிலக் கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.
ஜாதவ்பூர் பல்கலையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால் பரவலான விமர்சனங்களை எதிர்கொண்டனர். இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் 26 சிசிடிவி கேமராக்களை பொறுத்த அப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
காப்பகத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையடுத்து, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment