Join THAMIZHKADAL WhatsApp Groups
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ள வினாத்தாள் அடிப்படையில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான தேர்வு நேற்று துவங்கியது.தமிழ்/மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உடற்கல்வியியல் உள்ளிட்ட தேர்வுகள், வரும், 27ம் தேதி வரை நடக்கிறது.
28 முதல், அக்., 2 வரை ஐந்து நாள் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், அக்., 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கடந்த, 15ம் தேதி முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 காலாண்டு தேர்வுகள் துவங்கி நடந்து வருவது, குறிப்பிடத்தக்கது.வினாத்தாளை அந்தந்த பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட லிங்கில் மட்டுமே தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். வேறு பள்ளி லிங்க்கில் பதிவிறக்கம் செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment