Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆதார் கார்டில் உள்ள தகவல்களை அப்டேட் செய்வதற்கான இலவச சேவை டிசம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது, எந்தக் கட்டணமும் நீங்கள் செலுத்தாமல் உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை மாற்றிக் கொள்ளலாம்.
செப்டம்பர் 2010-ல் இந்திய அரசு தனது குடிமக்களுக்கு ஒருங்கிணைந்த அடையாள அட்டையை வழங்கும் விதமாக ஆதார் அட்டை முறையை கொண்டுவந்தது. 13 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம், திருத்தம் ஏதாவது தேவை என்றால் மேற்கொள்ளலாம் என்று யுஐடிஏஐ தெரிவித்தது.
இதன்மூலம் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் அட்டையில் தேவையான தகவல்களை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என 2023 ஆண்டின் தொடக்கத்தில், குடிமக்களுக்கு UIDAI அனுமதி வழங்கியது. இலவச புதுப்பிப்பு காலக்கெடு ஜூன் 14 என நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், இந்த காலக்கெடுவை செப்டம்பர் 14 வரை அரசு நீட்டித்தது.
இப்போது, மீண்டும் ஆன்லைன் ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் மேலும் நீட்டித்துள்ளது. இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை டிசம்பர் 14ஆம் தேதி வரை இலவசமாகப் புதுப்பிக்க வாய்ப்பளித்துள்ளது.
பொதுவாக, ஆதார் அட்டையில் ஒவ்வொரு விவரத்தையும் புதுப்பிப்பதற்கு ரூ. 50 செலவாகும். ஆனால், டிசம்பர் 14ஆம் தேதி வரை நாம் இலவசமாக திருத்தம் மேற்கொள்ளலாம். ஆன்லைன் மாற்றங்கள் கட்டணமில்லா அப்டேட்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற தரவுகளை ஆதார் மையங்களில் காசு கொடுத்து தான் செய்யவேண்டும்.
ஆதார் அட்டை பெற்ற பிறகு, வீடு மாறி இருந்தால் அல்லது வேறு ஊருக்கு குடிபெயர்ந்து இருந்தால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய முகவரியை ஆதார் அட்டையில் அப்டேட் செய்து கொள்ளலாம். MyAadhaar வெப்சைட்டில் இலவச ஆவண புதுப்பிப்பு வசதியைப் பயன்படுத்தி ஆதாரில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
https://myaadhaar.uidai.gov.in/portal வெப்சைட்டில் உள்நுழைந்து இலவச சேவையை அணுகலாம். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதைப் பதிவிட்டால் போதும். 'Document Update' என்ற பகுதியில் உங்களுடைய விவரங்களைச் சரிபார்த்து அதில் ஏதாவது மாற்றம் இருந்தால் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து மாற்றிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment