Join THAMIZHKADAL WhatsApp Groups
புதிய நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் உள்பட 23 மொழிகளில் எந்த மொழியில் பேசினாலும் மொழிப்பெயர்த்துக் கொடுக்கும் நவீன வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று கூட உள்ளது. 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நீண்ட நாள் நடைபெறும் சிறப்பு கூட்டத்தொடர் இதுவே ஆகும். நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் 19 ஆம் தேதி முதல் புதிய கட்டிடத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு பிறகு புதிய கட்டிடத்தில் கூட்டம் நடைபெறும் என தெரிகிறது.
நாடாளுமன்றத்தை பொறுத்தவரை இந்தியா முழுவதும் உள்ள எம்.பிக்கள் பல்வேறு கலாசாரங்கள், மொழி பின்னணியில் இருந்து வருவதால் அங்கு தாய் மொழியில் பேசும் போது பிற உறுப்பினர்கள் புரிந்து கொள்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. இதனால், தங்கள் மாநிலம் மற்றும் தொகுதிகளின் பிரச்சினைகளை உறுப்பினர்களால் உணர்ச்சி பொங்க தாய் மொழியில் எடுத்துக்கூறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
தற்போது நாடாளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் ஆங்கிலத்தில் பேசும் போது ஹிந்தியிலும், ஹிந்தியில் பேசினால் ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்த்துக் கொடுக்கும் வசதி இருக்கிறது. உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகள் முன்பாக இருக்கும் ஹெட் போன்களை மாட்டிக் கொண்டால் மொழி பெயர்ப்பை அறிந்து கொள்ள முடியும். அதேநேரத்தில் பிற மொழிகளில் உறுப்பினர்கள் பேசினால் புரிந்து கொள்ள முடியாது.
இதனால், அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகள் மற்றும் இங்கிலிஷ் உள்பட 23 மொழிகளில் பேசினாலும் மொழி பெயர்த்து கொடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனையின் படி இதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், தற்போது அதற்கான பணிகள் முடிந்து விட்டன. இதற்கான சோதனைகளும் முடிந்து விட்ட நிலையில்,
புதிய நாடாளுமன்றத்தில் இந்த வசதிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பயன்பாட்டுக்கு வரலாம் என கூறப்படுகிறது. எனினும் இதுதொடர்பான உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த வசதி பயன்பாட்டுகுக் வந்தாஅல் இனிமேல் நாடாளுமன்றத்தில் மொழி புரிதலில் எந்த பிரச்சினையும் இருக்காது. உறுப்பினர்கள் எந்த மொழியில் பேசினாலும் அனைத்து உறுப்பினர்களும் மொழி பெயரப்பு வசதி மூலம் புரிந்து கொள்ள முடியும்.
அரசியல் அமைப்பின் 8-வது அட்டவணையில் தமிழ், அசாமி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, பெங்காலி, போடோ, டோக்ரி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக உள்ளன. இந்த மொழிகளுடன் ஆங்கிலமும் மொழிப்பெயர்ப்பில் சேர்க்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment