Join THAMIZHKADAL WhatsApp Groups
காலையில் வெறும் வயிற்றில் ஓம நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை குறித்து பார்க்கலாம்.
ஓமத்தில் தைமோல் என்னும் மூலப்பொருள் உள்ளது.
இது ஓமத்திற்கு தனித்துவமான சுவை மற்றும் மணத்தைக் தருகிறது. ஓமத்தினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமாக இருப்பது அதில் உள்ள தைமோல் தான். சரி இனி இந்த ஓம நீரை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருள்:
ஓமம் - 2 ஸ்பூன் வறுத்தது
தயாரிப்பது எப்படி?
ஓமம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. ஓமத்தில் உள்ள முழு சத்துக்களையும் அதன் தண்ணீரை குடிப்பதன் மூலம் எளிதில் பெற முடியும்.
முதலாவது 2 டீஸ்பூன் ஓமத்தை லேசாக வறுத்து அதனை ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும் அல்லது ஓமத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்தும் பருகலாம்.
காலையில் ஓமத்தை நீரில் நன்கு கலக்கி வடிகட்டி வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இப்படி செய்யும் போது நாள்ப்பட்ட வாய்வு தொல்லை, உடல் எடைகுறைப்பு, கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வயிற்று பிரச்சனைகள், செரிமான பிரச்சனை போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.
No comments:
Post a Comment