Join THAMIZHKADAL WhatsApp Groups
தென்னிந்தியாவில் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் முதன்மையானது நல்லெண்ணெய். தற்போதும் பல்வேறு கிராமப்புறங்களில் நல்லெண்ணையில் சமைக்கும் முறை பழக்கத்தில் உள்ளது.
அதில் பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளன.
ஆசிய கண்ட பகுதிகளில், சீனர், கொரியர், ஜப்பானிய குடும்பங்களிலும் இதை அதிகம் உபயோகின்றனர். தமிழர்களின் மருத்துவம் மற்றும் ஆன்மிகத்துடன் நெருங்கிய தொடர்புடையது. எள், நெய் என்ற சொற்களின் கூட்டாக பிறந்தது எண்ணெய். எள் என்ற தானியத்தில் இருந்து பிரித்து எடுக்கும் நெய்யை குறிப்பது தான் இது. ஆனால், எண்ணெய் என்பது அனைத்து வகை தாவர எண்ணெய்களையும் குறிக்கும் பொதுவான சொல் ஆகிவிட்டது.
எள் தானியத்தில் எடுக்கப்படுவதை குறிக்க நல்லெண்ணெய் என்ற சொல் பயன்படுகிறது. உடல் நலத்துக்கு உகந்தது என்பதால் நல்ல எண்ணெய் என்ற பொருள் தருகிறது. நல்ல எண்ணெய் அடிக்கடி உணவில் சேர்த்தால் உடலில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும். நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் என்ற பொருளும், லினோலிக் என்ற அமிலமும் இருக்கிறது. இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது.
உடல் சூட்டால் அவதிப்பட தணிக்கும். சீராக வியர்வை வெளியேற உதவும். இதில், சீசேமோல் என்ற பொருள் நிறைய உள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது, இதய நோயை தடுக்கிறது. மக்னீஷியம் சத்து, நீரிழிவு நோயை தடுக்கும். இதில் உள்ள ஜிங்க் சத்து எலும்பு வளர்ச்சிக்கு உதவும். குடலியக்கம் சீராக நடக்க உதவும். செரிமானப் பிரச்னைகளை சரிசெய்யும் ஆற்றல் நல்லெண்ணெய்க்கு உண்டு. சரும அழகுக்கு நல்லெண்ணெய் மிகச்சிறந்த தீர்வாக உள்ளது. இந்த நல்லெண்ணெய் உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் மற்றும் மசாஜ் செய்வதற்கும் பயன்படுகிறது.
No comments:
Post a Comment